செந்தூரப்பூவே (தொலைக்காட்சித் தொடர்)
செந்தூரப்பூவே என்பது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குடும்பத் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2] இதில் பிரபல தமிழ் நடிகர் ரஞ்சித் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக தறி என்ற தொடரில் நடித்த ஸ்ரீ நிதி என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார்கள்.[3] இத்தொடர் சூலை 27, 2020 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி 4 அக்டோபர் 2021 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டு, பின்னர் 2022 முதல் மீண்டும் ஒளிபரப்பாகி, ஏப்ரல் 13, 2022 அன்று 340 அத்தியாயங்களுடன் நிறைவுபெற்றது.[1][2] கதை சுருக்கம்இந்த தொடரில் வயது வித்தியாயத்தில் திருமணம் செய்யும் கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு எப்படி சந்தோசமாக வாழ்கின்றார்கள் என்பது தான் கதை. நடிகர்கள்முதன்மை கதாபாத்திரம்
துணைக் கதாபாத்திரம்
சிறப்புத் தோற்றம்
தயாரிப்புஇந்த தொடர் 16 மார்ச் 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்படுவதற்காக திட்டமிடப்பட்டது. கொரோனாவைரசு காரணத்தால் 27 ஜூலை 2020 முதல் ஒளிபரப்பானது.[5] நடிகர்களின் தேர்வுஇந்த தொடரில் பிரபல முன்னால் நடிகரான ரஞ்சித் என்பவர் 'துரைசிங்கம்' என்ற கதாபாத்திரம் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக தறி என்ற தொடரில் நடித்த ஸ்ரீ நிதி என்பவர் 'ரோஜா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். 'தர்ஷா குப்தா' என்பவர் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். துரைசிங்கத்தின் மகள்களாக 'நிவாஷினி' மற்றும் 'திவ்யதர்ஷினி' ஆகியோர் நடிக்கிறார்கள். இவரின் தாய் கதாபாத்திரத்தி பிரபல சின்னத்திரையை நடிகை 'சாந்தி வில்லியம்ஸ்' என்பவர் 'ராஜலட்சுமி' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். மதிப்பீடுகள்கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
சர்வதேச ஒளிபரப்பு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia