டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை
டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை (Dr. Ambedkar Government Law College, Chennai) இந்தியாவின், சென்னை மாவட்டத்தில் இயங்கும் ஓர் அரசு சட்டக் கல்லூரி. இக்கல்லூரி 1891-இல் துவக்கப்பட்டது. முதலில் மெட்ராஸ் சட்டக் கல்லூரி எனப் பெயரில் இயங்கிய இக்கல்லூரியானது, இந்திய சுதந்திரப் போரட்ட வீரரும், தலித் தீண்டாமையை எதிர்த்து போராடியவரும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்தவருமான பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் நினைவைப் போற்றும் வகையில் 1990-இல் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி, சென்னை (DAGLC) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தியாவின் மிகப்பழமையான சட்டக் கல்லூரி இதுவேயாகும். 115 ஆண்டு கால பழமை வாயந்தது. இக்கல்லூரி தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரி ஆகும். இக்கல்லூரியில் 2008 நவம்பர் 12 ஆம் நாள் இருமாணவக் குழுக்களிடையே மோதல் நடைபெற்றது.[1][2] இந்தக் கலவரத்தில் 43 நபர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு, சென்னை 17-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. பின்னர் கி. ஆம்ஸ்ட்ராங், வழக்கறிஞர் ரஜினிகாந்த் உள்பட 22 நபர்களை விடுதலை செய்ததும், 21 நபர்களுக்குத் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியும் தீர்ப்பு வெளிவந்தது. வரலாறு![]() இக்கல்லூரியானது திரு. ஜார்ஜ் நியூட்டன் என்பவருடைய யோசனையால் ஆரம்பிக்கப்பட்டது. அவர் சென்னைக்கென தனியாக ஒரு சட்டக் கல்லூரி வேண்டும் என யோசனை கூறினார். மேலும் அப்போது சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் ஒரே ஒரு பேராசிரியரால் தான் சட்ட கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது. பழைய மாணவர்களில் முக்கியமானவர்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia