தஞ்சாவூர் உக்கிரகாளியம்மன் கோயில்
தஞ்சாவூர் உக்கிரகாளியம்மன் கோயில், தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், தஞ்சாவூரில் கீழவாசல் பகுதியில் குயவர் தெருவில் அமைந்துள்ளது. தேவஸ்தான கோயில்தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். [1] இக்கோயிலின் குடமுழுக்கு ஜனவரி 26, 2011இல் நடைபெற்றது. அமைப்புஇக்கோயில் முன் மண்டபம், கருவறை, விமானம் ஆகிய அமைப்புகளோடு விளங்குகிறது. கோயிலின் முன்பாக சாம்பான் உள்ளார். முன்மண்டபத்தில் வலது புறம் கருப்பண்ணசாமியும், இடது புறம் மதுரை வீரன் தன் துணைவியரோடும் உள்ளனர். இம்மண்டபத்தில் பலிபீடமும், சிங்கமும் காணப்படுகின்றன. மூலவர்இக்கோயிலின் மூலவராக உக்கிரகாளியம்மன் உள்ளார். கருவறையின் முன்பாக இருபுறமும் துவார பாலகிகள் உள்ளனர். கருவறைக்கு மேலே விநாயகரும், முருகனும் உள்ளனர். நடுவில் கஜலட்சுமி உள்ளார். மண்டபத்தின் இடப்புறம் மாயசக்தி, சக்தி விநாயகர், விஷ்ணு துர்க்கை, சனீஸ்வரன், ராகு ஆகியோர் உள்ளனர். சிற்பச் சிறப்புஉக்கிரமாகாளி மற்ற இடங்களில் காணப்பெறும் முற்காலச் சோழர் கலைப்பாணியில் அமைந்த காளாபிடாரியாக காணப்படுகிறார். [2] முன்னர் இச்சிற்பம் மூலவராக இருந்ததாகவும், பின்னர் அது சிதைந்துவிட்டதால் தற்போது புதிய மூலவரை அமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த உக்கிரமாகாளி சிற்பம் மூலவர் அறைக்கு இடப்புறத்தில் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. மேற்கோள்கள்வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia