தஞ்சாவூர் காசி விசுவநாதர் கோயில்
தஞ்சாவூர் காசி விசுவநாதர் கோயில், தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், தஞ்சாவூரில் மேல வீதியில் அமைந்துள்ளது. தேவஸ்தான கோயில்தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். [1] [2] அமைப்புஇக்கோயில் ராஜகோபுரம், பலிபீடம், முன் மண்டபம், கருவறை, விமானம், வெளிச்சுற்று ஆகிய அமைப்புகளோடு விளங்குகிறது. கருவறை கோஷ்டத்தில் நர்த்தன விநாகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் கணபதி, சண்முகர், கஜலட்சுமி, துர்க்கை, சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. கோயிலின் இடப்புறம் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சன்னதி உள்ளது. கோயிலில் பைரவர் சனீஸ்வரர், சூரியன் ஆகியோரும் உள்ளனர். நவக்கிரக சன்னதியும் இக்கோயிலில் உள்ளது. மூலவர்இக்கோயிலின் மூலவராக காசி விசுவநாதர் உள்ளார். மூலவர் சன்னதியின் இடது புறம் விசாலாட்சி சன்னதி உள்ளது. குடமுழுக்கு26 மார்ச் 1999 மற்றும் 18 மார்ச் 2012இல் குடமுழுக்கு ஆனதற்கான கல்வெட்டுகள் காணப்படுகின்றன. மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia