தஞ்சாவூர் சங்கரநாராயணர் கோயில்
தஞ்சாவூர் சங்கரநாராயணர் கோயில், தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், தஞ்சாவூரில் மேல ராஜ வீதியில் சிவகங்கைக்குளத்தின் அருகே அமைந்துள்ளது. தேவஸ்தான கோயில்தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[1] இக்கோயில் வரலாறு பிருகதீஸ்வர மகாத்மியம், தஞ்சபுரி மகாத்மியம் முதலிய நூல்களில் கூறப்பட்டுள்ளன.[2] மூலவர்இக்கோயிலின் மூலவராக சங்கர நாராயணர் லிங்கத்திருமேனியாக உள்ளார். அமைப்புகோயிலின் முகப்பில் சங்கரநாராயணர் இரு புறமும் தேவியருடன் காணப்படுகிறார். கருவறையின் முன்பாக நந்தியும், பலிபீடமும் உள்ளன. மூலவர் அறையின் இடப்புறம் பாலாம்பிகை சன்னதி உள்ளது. கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அடிமுடிகாணா அண்ணல், துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் செல்வகணபதி, வள்ளிதெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், பார்வதி தேவி மற்றும் லட்சுமி தேவியுடன் சங்கரநாராயணர், கஜலட்சுமி ஆகியோர் உள்ளனர். மண்டபத்தில் நவக்கிரகங்கள், சூரியன், சனீஸ்வரன், கால பைரவர் உள்ளனர். சங்கரநாராயணர் சிறப்புசங்கரநாராயணர் சிற்பம் திருச்சுற்றில் உள்ளது. சங்கரநாராயணன், வலப்புறம் சிவனின் அம்சமாகவும், இடப்புறம் நாராயணரின் அம்சமாகவும் காணப்படும் கோலத்தில் உள்ளார். இறைவி பாலாம்பிகை தனி சன்னதியில் உள்ளார்.[3] வலப்புறம் ஜடா மகுடம், கங்கை, சந்திரன், நெற்றிக்கண், மகர குண்டலம், திருநீறு, உருத்திராட்சமாலை, மேற்கரத்தில் மழு, இடுப்பில் புலித்தோல் என்ற நிலையில் சிவனின் தோற்றமும், இடப்புறம் மணி மகுடம், திருநாமம், திருவாபரணங்கள், மேற்கரத்தில் சங்கு ஏந்தியபடி திருமாலின் தோற்றமும் சிறப்பான அம்சமாகும்.[3] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia