தஞ்சாவூர் விஜயமண்டப தியாகராஜர் கோயில்
தஞ்சாவூர் விஜயமண்டப தியாகராஜர் கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இந்தக் கோயில் தஞ்சாவூர் நகரில் மானம்புச்சாவடியில் உள்ளது. தேவஸ்தான கோயில்தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். [1] [2] இறைவன், இறைவிசிவன் கோயில்களில் பொதுவாக லிங்கத்திருமேனி காணப்படும்.ஆனால் இக்கோயிலில், சற்று உயரத்தில் காணப்படும் கருவறையில் தியாகராஜர் மற்றும் கமலாம்பாளின் சிற்பங்கள் உள்ளன. அமைப்புகோயிலின் முன்பாக இரு யானைகள் இழுத்துச் செல்லும் வடிவிலான தேர் போன்ற வடிவில் ஒரு மண்டபம் அமைந்துள்ளது. ஒவ்வொரு புறமும் ஒரு யானை என்ற நிலையில் இரு யானைகள் நான்கு சக்கரங்களைக் கொண்ட தேரை இழுத்துச் செல்லும் வகையில் அந்த மண்டபம் உள்ளது. மண்டபத்தின் முகப்பில் கஜலட்சுமி சுதை வடிவில் உள்ளார். ஒவ்வொரு புறத்திலும் ஒருவர் என்ற நிலையில் இரு புறமும் இரு வீரர்கள் உள்ளனர். சற்று தள்ளி உள்ளே சென்றதும் கோயில் உயர்ந்த தளத்தில் உள்ளது. முன்பு காணப்படுகின்ற மண்டபத்தில், கருவறைக்கு முன்பாக வலப்புறம் கமல விநாயகரும், இடப்புறம் சிவசுப்பிரமணியரும் உள்ளனர். படிகளின் மீது ஏறி சென்றதும் அங்கு மூலவர் கருவறை உள்ளது. மூலவர் கருவறைக்குப் பின்புறம் தாழ்ந்த தளத்தில் கௌரி அம்மன் உள்ளார். குடமுழுக்குஇக்கோயிலில் 1.9.1996 அன்று குடமுழுக்கு நடைபெற்றதற்கான கல்வெட்டு உள்ளது. மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia