துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 1987
துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப்போட்டி 1987 (1987 Cricket World Cup Final, கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டி 1987) என்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் நான்காவது உலகக் கிண்ணத்துக்காக இடம்பெற்ற சுற்றுப் போட்டிகளின் இறுதிப் போட்டி பற்றியதாகும். இப்போட்டி 1987 நவம்பர் 8 ஆம் நாள் கொல்கத்தா, ஈடன் கார்டன்ஸ் துடுப்பாட்ட அரங்கில் நடைபெற்றது. அலன் போர்டர் தலைமையிலான ஆத்திரேலியா துடுப்பாட்ட அணி இறுதிப் போட்டியில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக ஆடி தனது முதலாவது உலககிண்ணதைப் பெற்றுக் கொண்டது. நடைபெற்ற திகதிநவம்பர் 8 1987 அணிக்கு 60 ஓவர்கள் என்ற வழக்கமான விதி மாற்றப்பட்டு அணிக்கு 50 ஓவர்களாக குறைக்கப்பட்டன. இங்கிலாந்தைப் போலன்றி துணைக் கண்ட நாடுகளில் பகல் வேளை நீண்ட நேரம் நீடிக்காமை காரணமாகவே இந்த விதி மாற்றப்பட்டது.[1]. நடைபெற்ற அரங்கம்முதல் தடவையாக இங்கிலாந்தில் அல்லாமல் ஆசிய நாடுகளான இந்தியாவும், பாக்கிஸ்தானும் இணைந்து இப்போட்டியை நடத்தியமை குறிப்பிடத்தக்கது .இறுதிப் போட்டி இந்தியா கொல்கத்தா, ஈடன் கார்டன்ஸ் அரங்கில் நடைபெற்றது. இறுதிப் போட்டி அணிகள்ஆத்திரேலியா அணி
இங்கிலாந்து அணி
நாணயச்சுழற்சிவெற்றி - ஆத்திரேலியா, முதலில் துடுப்பெடுத்தாட முடிவெடுத்தது. நடுவர்கள்
இறுதிப் போட்டி
ஆத்திரேலியா அணியின் துடுப்பாட்டம்
உதிரிகள் - 26 மொத்தம் 5 விக்கட் இழப்புக்கு ( 50 ஓவர்கள்) 253 ஆட்டமிழந்த ஒழுங்கு: 1-75 (மார்ஸ்), 2-151 (ஜோன்ஸ்), 3-166 (மெக்டமோட்), 4-168 (பூன்), 5-241 (அலன்போடர்) துடுப்பெடுத்து ஆடாதவர்கள் எஸ்.பி. டொனல், ஸி.ஜி.டையர், டி.பி.ஏ. மே, பி.ஏ. ரீட், இங்கிலாந்து அணியின் பந்து வீச்சு
இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டம்
உதிரிகள் - 21 மொத்தம் 8 விக்கட் இழப்புக்கு ( 50 ஓவர்கள்) 246 ஆட்டமிழந்த ஒழுங்கு: 1-1 (ஆர்.டி. ரொபின்சன்), 2-66 (ஜி.எ. கூச்), 3-135 (கெட்டிங்), 4-170 (எதே), 5-188 (டவுன்டன்), 6-218 (எம்புரோ), 7-220 (லேம்ப்), 8-235 (டிப்ரிடாஸ்) ஆத்திரேலியா அணியின் பந்து வீச்சு
முடிவுஆத்திரேலியா 7 ஓட்டங்களினால் இங்கிலாந்து அணியை வெற்றி கொண்டது. போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஆத்திரேலியாவைச் சேர்ந்த டேவிட்பூன் தெரிவானார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia