முதல் இரு போட்டிகளில் வென்ற ஆத்திரேலியா ட்ரான்ஸ்-டாஸ்மன் கிண்ணத்தை தக்கவைத்துக் கொண்டது.[6] பிறகு 3வது போட்டியிலும் வென்று 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
2வது தேர்வுப் போட்டிக்கு முன்பு காயம் காரணமாக ஜோஷ் ஹேசல்வுட் ஆத்திரேலிய அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு மாற்றாக பீட்டர் சிடில் சேர்க்கப்பட்டார்.[8] நியூசிலாந்து அணியில் இருந்து காயம் காரணமாக லொக்கி பெர்கசன் நீக்கப்பட்டு அவருக்கு மாற்றாக கைல் ஜேமின்சன் சேர்க்கப்பட்டார்.[9] 3வது தேர்வுப் போட்டிக்கு முன்பு ஆத்திரேலிய அணியில் மைக்கல் ஸ்வெப்சன் சேர்க்கப்பட்டார்.[10] 3வது தேர்வுப் போட்டிக்கு முன்பு காயம் காரணமாக டிரென்ட் போல்ட் நியூசிலாந்து அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு மாற்றாக வில்லியம் சோமர்வில் சேர்க்கப்பட்டார். 3வது தேர்வுப் போட்டிக்கு முன்பு நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன், ஹென்றி நிக்கோல்ஸ் ஆகிய இரு வீரர்களுக்கு காய்ச்சல்-போன்ற அறிகுறிகள் தென்பட்டதால் அவர்களுக்கு முன்னேற்பாடாக கிளென் பிலிப்சு சேர்க்கப்பட்டார்.[11]