2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக 125 தொகுதிகளைக் கைப்பற்றி, தனித்து ஆட்சியமைப்பதற்குத் தேவையான அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றது. மதச் சாற்பற்ற முற்போக்குக் கூட்டணி மொத்தம் 159 இடங்களைக் கைப்பற்றியது. பத்து ஆண்டுகளாக எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்த திமுக 2011 முதல் 2021 வரை ஆட்சியில் இருந்த அஇஅதிமுக இடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியது.[2]
பொது, இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, இந்திய , பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல்துறை,உள்துறை, சிறப்பு முயற்சி, சிறப்பு திட்ட அமலாக்கம், மாற்றுத் திறனாளிகள் நலன்
வீட்டு வசதி, ஊரக வீட்டு வசதி, நகரமைப்புத் திட்டமிடல் மற்றும் வீட்டு வசதி மேம்பாடு, இடவசதி கட்டுப்பாடு, நகரத் திட்டமிடல் நகர் பகுதி வளர்ச்சி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்
வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் - வேளாண்மை, வேளாண்மை பொறியியல், வேளாண் பணிக்கூட்டுறவு சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத்தீர்வை, கரும்புப் பயிர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு.
செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில் நுட்பவியல் மற்றும் திரைப்படச் சட்டம், பத்திரிகை, அச்சுக் காகிதக் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம்.
மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூகநலம், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மற்றும் இரவலர் காப்பு இல்லங்கள் மற்றும் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவுத் திட்டம்.
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் - மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ்சாற்றுக் கசண்டு (மொலாசஸ்).
வணிகவரி, பதிவு மற்றும் முத்திரைத் தாள் சட்டம், எடைகள் மற்றும் அளவைப்கள், கடன் கொடுத்தல் குறித்த சட்டம் உள்ளிட்ட கடன் நிவாரணம், சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு.
மே 7, 2021 முதல்
பிற்படுத்தப்பட்டோர் நலன், மற்றும் சீர் மரபினர் நலன்.
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் - சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலன், அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் வக்பு வாரியம்
சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் - சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை