மகாராட்டிரா நவநிர்மாண் சேனா
மகாராட்டிரா நவநிர்மாண் சேனை (மகாராட்டிரா சீர்திருத்த இராணுவம் (Maharashtra Navnirman Sena) என்பது மகாராட்டிர மாநிலத்தில் செயல்பட்டுவரும் ஒரு பிராந்தியவாத தீவிர வலதுசாரி அரசியல் கட்சியாகும். மேலும் இது இந்துத்துவம் மற்றும் மராத்தியம் தொடர்புடைய சித்தாந்தத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.[12][13] ராஜ் தாக்ரே தனது உறவினர் உத்தவ் தாக்கரேயுடனான கருத்து வேறுபாடு காரணமாக சிவ சேனா கட்சியை விட்டு வெளியேறிய பின்னர் 9 மார்ச் 2006 அன்று மும்பையில் இது நிறுவப்பட்டது. தேர்தல் இட ஒதுக்கீடு போன்ற முக்கிய முடிவெடுக்கும் சமயங்களில் ஒதுக்கபட்டது போன்ற காரணங்களால் சிவ சேனாவில் இருந்து விலகியபின் ராஜ் தாக்கரே இந்தப் புது கட்சியைத் தொடங்கினார். மகாராட்டிரா நவநிர்மாண் சேனை 2009 சட்டமன்றத் தேர்தலில் 13 சட்டமன்ற இடங்களை (288 இல்) வென்றது.[14] அக்கட்சி போட்டியிட்ட முதல் மகாராட்டிர சட்டமன்றத் தேர்தலாகும். 2019 மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தலில், கட்சி 1 இடத்தில் மட்டுமே வென்றது. ஜனவரி 2020 இல், கட்சி ஒரு புதிய கொடியை வெளியிட்டது. இருப்பினும் கொடியில் உள்ள சின்னத்தை தேர்தலுக்கு பயன்படுத்தவில்லை.[15] அறக்கட்டளைமறைந்த சிவ சேனா தலைவர் பால் தாக்கரேவின் மருமகனும், பிரபோதங்கர் தாக்கரேவின் பேரனுமான ராஜ் தாக்கரேவால் கட்சி நிறுவப்பட்டது. சிவ சேனா "சாதாரண குமாஸ்தா"க்களால் நடத்தபடும் கட்சியாக ஆகிவிட்டதால் தனது பழைய பெருமையை இழந்து விட்டது. அதுவே கட்சியை விட்டு விலக காரணமாக அமைந்ததாக தெரிவித்தார். மேலும் மாநிலத்தின் வளர்ச்சி சார்ந்த பிரச்சனைகளைப் பற்றிய அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவற்றை தேசிய அரசியலில் மையப்படுத்தும் தெளிவான நோக்கமும் திரு. ராஜ் தாக்கரேவுக்கு இருந்தது. இதற்கான திட்டங்களுக்கு மாநில இளைய சமுதாயத்தின் பெருவாரியான ஆதரவும் அனுதாபமும் கிடைக்கின்றது. கட்சி தொடங்கும்போது ராஜ் தாக்கரே தனது மாமாவுடன் தனக்கு பகையுணர்வு இல்லையென்றும் அவர் "அன்றும், இன்றும், மற்றும் என்றும் தனது நம்பகமான ஆலோசகராக இருப்பார்" என்று தெரிவித்தார். கட்சி சிவசேனாவில் இருந்து பிரிந்த குழுவாக இருந்தாலும், பூமிபுத்திர கொள்கையே அதன் அடிப்படையாக இருந்தது. சிவாஜி பார்க் கூட்டத்தில் கட்சியை அறிமுகப்படுத்தும்போது இந்துத்வா[16] என்ன ஆகும் என்று அனைவரும் கவலையுடன் இருப்பதாக தெரிவித்தார். மேலும் அவர் "மார்ச் 19 அன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மண்ணின் மைந்தர்கள் மற்றும் மராத்தி போன்றவற்றில் கட்சியின் நிலை மற்றும் மகாராஷ்ட்ராவின் வளர்ச்சிக்கான திட்டங்கள் மற்றும் கட்சி கொடியின் சிறப்பம்சங்களை விளக்குவேன்"[17] ராஜ் தாக்கரே தன்னை ஒரு இந்திய தேசியவாதியாக கருதுகிறார்.[18] கட்சி மதச்சார்பின்மையை அதன் முக்கிய கொள்கைகளில் ஒன்றாக அங்கீகரிக்கிறது.[19] மகாராட்டிரா வளர்ச்சி திட்டம்செப்டம்பர் 2014 இல், மகாராட்டிரா நவநிர்மாண் சேனை அதன் முதல் தோற்றத்தை "மகாராட்டிராவின் வளர்ச்சி வரைபடத்தின்" 'ஆம், இது சாத்தியம்' என்ற முழக்கத்துடன் வெளியிட்டது [1] . உள்கட்டமைப்பு, நிர்வாகம், வாழ்க்கைத் தரம், வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் மராத்தி பெருமை குறித்த கட்சியின் நிலைப்பாடு மற்றும் முக்கிய யோசனைகள் குறித்து இந்த வரைபடம் விவாதிக்கிறது.[20] சர்ச்சைகள்2008 மகாராட்டிராவில் வட இந்தியர்களுக்கு எதிரான வன்முறை![]() பிப்ரவரி 2008 இல் , மும்பையில் சமாஜ்வாதி கட்சி தொண்டர்களுடன் சில மகாராட்டிரா நவநிர்மாண் சேனை செயற்பாட்டாளர்கள் மோதிக்கொண்டனர். மோதலுக்குப் பிறகு, 73 மகாராட்டிரா நவநிர்மாண் சேனை ஆர்வலர்களும் 19 சமாஜ்வாதி கட்சியினரும் வன்முறைக்காக மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.[21] 6 பிப்ரவரி 2008 அன்று, ராஜ் தாக்கரேவின் வட இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டின் காரணமாக சுமார் 200 மகாராட்டிரா நவநிர்மாண் சேனை உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலகி சிவசேனாவில் இணைந்தனர்.[22] பீகார் மற்றும் கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் ( பூர்வாஞ்சல் ) மிகவும் பிரபலமான பண்டிகையான சத் பூசை பற்றி தாக்கரே கூறியதாகக் கூறப்படும் கருத்துக்கு எதிராக பிப்ரவரி 8 அன்று பாட்னா குடிசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.[23] திரு. தாக்கரே, தான் சத் பூசைக்கு எதிரானவன் அல்ல,[24] ஆனால் பீகார் மற்றும் கிழக்கு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் இந்தச் சந்தர்ப்பத்தில் காட்டப்படும் "ஆணவத்தையும்" மற்றும் "சத் பூசையை அரசியலாக்குவதையும்" தான் எதிர்ப்பதாக கூறினார்." 2008 பிப்ரவரி 10, ராஜ் தாக்கரே கைதாவார் என்ற வதந்தி பரவியதால் கட்சி தொண்டர்கள் மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் வட இந்திய விற்பனையாளர்கள், கடைக்காரர்கள் ஆகியோரைத் தாக்கியும் அரசு சொத்துக்களை சேதப்படுத்தியும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.[25] நாசிக் காவல் துறையினர் வன்முறையில் ஈடுபட்ட 26 கட்சித் தொண்டர்களை கைது செய்தனர். இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட முன்னணியில் இருப்பதால் உத்திரப் பிரதேசம் மற்றும் பீகாரைச் சேர்ந்த பிழைப்பு தேடும் மக்கள் பெருமளவில் மகாராட்டிராவிற்கு வருகின்றனர். இதைப் பற்றிய ராஜ் தாக்கரேவின் 2008 பிப்ரவரி பேச்சு பெரிதும் சர்ச்சையாக மாறியது. மகாராட்டிராவின் பொருளாதாரம் உத்திரப் பிரதேசத்தின் சமாஜ்வாடி கட்சி தொண்டர்களுடன் சேனைக் கட்சியினர் தெருக்களில் மோதி வன்முறையில் ஈடுபட்டனர். தாக்கரே பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான உத்திர பிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட அமிதாப் பச்சன் , அமர் சிங் ஆகியோர் உத்திர பிரதேசத்திற்கும், பீகாருக்கும் வணிகத்தொடர்புகளை ஏற்படுத்துவதாக விமர்சித்தார். பச்சன் பாலிவுட் எனப்படும் மும்பை திரைப்படத் தொழில் மூலம் பேரும் புகழும் அடைந்தவர்[26][27] மகாராட்டிராவிலுள்ள வட இந்திய கட்டுமான தொழிலாளர்களை கட்சியினர் தாக்கியதால் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் கட்டுமானப் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. அதனால் 2008 செப்டம்பர் 8ஆம் நாளன்று அந்நிறுவனம் 3000 பணிஇடங்களை புனேவிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றியது.[28] 2008 அக்டோபர் 15 அன்று, பொருளாதார மந்த நிலையினால் சிக்கன நடவடிக்கையாக வேலையிலிருந்து நீக்கிய பயிற்சி பணியாளர்களை ஜெட் ஏர்வேஸ் நிறுவனமானது மீண்டும் வேலையில் அமர்த்தாவிடில் அதன் செயல்பாடுகளை முடக்கி விடுவதாக தாக்கரே எச்சரிக்கை விடுத்தார்.[29] அபு ஆஸ்மிக்கு கண்டனம்நவம்பர் 9, 2009 அன்று சமாஜ்வாதி கட்சியின் அபு ஆஸ்மி மாநில அலுவல் மொழியான மராத்தியில் அல்லாமல் இந்தியில் பதவிப்பிரமாணம் செய்வதை சேனையின் சட்டமன்ற உறுப்பினரால் கண்டித்து தடுத்தார். இந்தச் சம்பவத்தையடுத்து, மோதலில் ஈடுபட்ட சேனையின் சட்டமன்ற உறுப்பினர்கள் 4 பேரையும் மகாராட்டிர சட்டப்பேரவைத் தலைவர் 4 ஆண்டுகளுக்கு தற்காலிக பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார். மும்பை மற்றும் நாக்பூர் ஆகிய இரு நகரங்களில் சட்டசபை கூடும் போதெல்லாம் அவர்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டது.[30] ராம் கதம், ரமேஷ் வஞ்சலே, ஷிஷிர் ஷிண்டே மற்றும் வசந்த் கீதே ஆகிய உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.[31][32] பின்னர் ஜூலை 2010 இல் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டது.[33] சான்றுகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia