இந்துத்துவம்

இந்துத்துவம் அல்லது இந்துத்துவா கொள்கை என்பது ஆர்எஸ்எஸ் என்ற இந்து மத அமைப்பை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரான சாவர்க்கரால் முன் மொழியப்பட்ட இந்து மதத்தின் அடிப்படை கருத்தியல் ஆகும்.[1][2][3][4]

வரலாறு

  • இந்துத்துவம் என்பது எந்தவொரு சமரசமும் இன்றி இந்துக்களின் பழமைவாத கருத்துகளையும், அவர்களின் நலன், இறை வழிபாடு, பண்பாடு, பாரம்பரிய உரிமைகளை பேணுவதற்கும், பாதுகாப்பதற்கும் வரையறுக்கப்பட்ட ஒரு கோட்பாடாகும்.
  • இது இந்துக்களின் நம்பிக்கை மற்றும் உணர்வுகளை பாதுகாக்கிறது.
  • மேலும் இந்துத்துவா கொள்கை சில தீண்டாமை நிலைபாடுடன் மனித வாழ்வியலில் பல ஏற்ற தாழ்வுகளுடன் இருப்பதால் அவை மேல்மட்ட இந்துக்களுக்கு மட்டுமே சாதகமாக இருப்பதால் தென்னிந்திய மக்களிடம் இவ்வகை கருத்தியல் ஏற்புடையதாக இல்லாமல் போனதால் இந்துத்துவா கொள்கை இந்தியா முழுவதும் ஏற்கபடாத கொள்கையாக போனது என்றும் கூறப்படுகிறது.
  • மேலும் இந்து மத கருத்தியலில் வட இந்தியாவில் சில பகுதிகளில் மட்டுமே மக்களால் ஏற்கபட்டு இந்துத்துவா கொள்கை வெற்றி பெற்றாலும் பெரும்பாலான தென்னிந்தியா மற்றும் வட கிழக்கிந்தியாவில் பலர் கிறிஸ்துவம், இஸ்லாம், பௌத்தம் மதத்தை ஏற்று தழுவி கொண்டதால் இந்துத்துவா கொள்கை அங்கெல்லாம் பின்னடைவை சந்தித்தது.
  • அதைவிட இந்தியா சுதந்திரத்தின் போது இந்துக்கள் வாழும் அன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவின் பெரும் நிலப்பகுதியான பாகிஸ்தான் இஸ்லாமியர்களுக்கு தனிநாடாக சென்ற பிறகு இந்துத்துவா கொள்கை தோல்வியை தழுவியது என்றும் சில அரசியல் அறிஞர்களால் கூறப்படுகிறது.

கருத்து

  • வரலாற்றாசிரியரின் கருத்துப்படி இந்துத்துவம் என்பது மேம்பட்ட அரசியல் சூழலில் அதுசார்ந்த ஆதாரங்களுக்கானது என்று புகழ்பெற்ற இந்திய வரலாற்றாசிரியரான பேராசிரியர் ரொமிலா கூறுகிறார். [5]

மேற்கோள்

  1. http://www.tamilhindu.com/2012/11/hindutva-pathippagam/
  2. http://www.viduthalai.in/headline/49533-2012-11-27-10-51-59.html
  3. http://www.tamilhindu.com/2010/06/savarkar_historian/
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-11-14. Retrieved 2012-11-30.
  5. இந்து மதம் என்பது வேறு, இந்துத்துவம் என்பது வேறு: பிரபல வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர் ‘ஃபிரண்ட்லைன்’ இதழுக்கு பேட்டி தி இந்து தமிழ் 03.செப்டம்பர் 2015
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya