ராமன் எத்தனை ராமனடி
ராமன் எத்தனை ராமனடி (Raman Ethanai Ramanadi) 1970 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா, பத்மினி, ஆர். முத்துராமன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3] கதைச் சுருக்கம்பூங்குடி என்ற கிராமத்தில் வயதில் இளைஞனாகவும் அறிவில் குழந்தையாகவும் ஒருவன் வாழ்ந்து வந்தான்- அவன்தான் சாப்மாட்டு ராமன். நிலவைப் பிடித்து விளையாட விரும்பும் குழந்தையைப் போல், அந்த அப்பாவி ஒரு பெரிய இடத்துப் பெண்ணை விரும்பினான். ஏழைக்குக் காதல் வரக்கூடாதா? கூடாது என்று சொன்னான் மைனர் ராஜரத்தினம். உயர்வு தாழ்வு என்ற அந்தஸ்தை உடைத்தெறியும் சக்தி காதலுக்கு உண்டு என்று சொன்னாள் ராஜரத்தினத்தின் தங்கை தேவகி. தேவகியின் அந்த வார்த்தைகள் சாப்ட்டு ராமனை ஓர் லட்சிய ராமனாக மாற்றியது. ஊரை விட்டுச் சென்ற சாப்பாட்டு ராமன் தன் லட்சியத்தில் வெற்றி பெற்று பிறந்த பூமிக்கு ஜெயராமனாக திரும்பி வந்தான்–எப்படி? அந்த ஜெயராமன் கல்யாண ராமனாகாமலேயே ஒரு குழந்தைக்கு தந்தையானான் –எதற்காக? உடலை மட்டும் விரும்பி உறவு கொள்ளுதற்கு பெயர் காமம் - உள்ளத்தை விரும்பி, உயிரையே கொடுப்பதற்கு பெயர் காதல், அப்படிப்பட்ட உன்னதமான காதலை தன் லட்சியமாகக் கொண்டு வாழ்ந்த ஒரு நல்லவனின் கதைதான் - ராமன் எத்தனை ராமனடி. நடிகர்கள்
பாடல்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ராமன் எத்தனை ராமனடி
|
Portal di Ensiklopedia Dunia