ராம் பிரசாத் பிசுமில்
ராம் பிரசாத் பிசுமில் (Hindi: राम प्रसाद 'बिस्मिल', 11 சூன் 1897 - 19 டிசம்பர் 1927)[1] 1918ல் நடந்த மனிப்பூரி ரயில் கொள்ளை மற்றும் 1926ல் நடந்த ககோரி ரயில் கொள்ளை போன்றவற்றால் அதிகம் அறியப்பட்ட ஓர் இந்திய விடுதலைப் போராளியாவார். அதேபோல் ராம், அகாயத், பிசுமில் போன்ற பெயர்களில் இந்தி மற்றும் உருது மொழிகளில் அறியப்பட்ட ஒரு நாட்டுப்பற்று மிகுந்த கவிஞர்.[2] ஆனால் அவர் பிசுமில் என்ற தன் கடைசிப் பெயரிலேயே அதிகம் அறியப்பட்டார். சுவாமி தயானந்த சரசுவதியால் எழுதப்பட்ட சத்யார்த் பிரகாசு என்ற புத்தகத்தால் கவரப்பட்டு ஆர்ய சமாஜ் இயக்கத்தில் இணைந்தார்.[3] அங்கு லாலாகர் தயால் என்பவரிடம் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். மேலும் இவர் இந்துசுத்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி இயக்கத்தை ஆரம்பித்தவர்களுள் ஒருவர். பகத் சிங்கால் உருது மற்றும் இந்தி மொழியின் மிகச்சிறந்த கவிஞர் மற்றும் எழுத்தாளர் என்று பாராட்டப்பட்ட இவர் ஆங்கிலப் புத்தகமான காதரின் மற்றும் வங்காளிப் புத்தகமான போல்சேவிகான் கர்தூத் ஆகிய புத்தகங்களை மொழிபெயர்த்தவர். மேலும் பல நாட்டுப்பற்று மிக்க பாடல்களை எழுதிய இவர், தானெழுதிய சர்வரோசி கி தமன்னா என்ற இந்தி பாடலின் மூலம் அதிகம் அறியப்பட்டவர்.[4] இளமைப்பருவம்பிசுமில் 11 சூன் 1897ல் உத்திரபிரதேச மாநில சாசகான்பூரில் முரலிதர் மற்றும் மூலமதி என்ற தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அடிப்படையில் இவரது பாட்டனார் மத்திய பிரதேச மாநில பார்பாய் நகரை சேர்ந்தவராயினும் பின்பு சாசகான்பூரிற்கு குடிமாறினார். பள்ளி வாழ்க்கைபிசுமிலின் தந்தை பிசுமிலை சாசகான்பூர் உள்ளூர் முதல் நிலைப் பள்ளியில் சேர்த்தார். அங்கே இந்தி மொழியில் வு உச்சரிப்பு ஆந்தையை குறித்தால் பிசுமில் இந்தி மொழி கல்வியை கற்பதற்கு பிடிவாதமாக மறுத்தார்.[5] அதனால் அவர் உருது மொழிப்பள்ளியில் பிசுமிலைச் சேர்த்தார். அங்கே தீய நண்பர்களின் சகவாசத்தால் பிசுமில் காதல்சார் கவிதைகளை படித்ததால் கல்வியில் ஆர்வம் குன்றியது. அதனால் ஏழாம் வகுப்பில் இரு முறை தோல்வி கண்டதால் அவரது தந்தை பிசுமிலை ஆங்கிலப் பளியில் சேர்த்தார். எட்டாம் வகுப்பிற்குப் பிறகு சாசகான்பூர் அரசுப்பள்ளியில் பயின்றார். அங்கே அவரது எழுது பெயரை பிசுமில் என்றே வைத்துக் கொண்டார். நாட்டுப்பற்றுக் கவிதைகளை அதிகம் எழுதிய இவர் அதன் பிறகு ராம் பிரசாத் பிசுமில் என்றே அறியப்பட்டார். வாழ்க்கை வரலாற்று நூல்பிசுமில் அவரின் வாழ்க்கை வரலாற்றை தான் கொரக்பூர் சிறையில் இறப்பதற்கு மூன்று நாள் முன்பு சர்வ ரோசி கீ தமனா என்ற பெயரில் எழுதினார். பிசுமிலின் வாழ்க்கை வரலாறு நூல் 1928ல் கனேசு சங்கர் வித்யார்த்தி என்பவரால் எழுதப்பட்டு அப்போதைய ஐக்கிய மாகாண அரசின் சிஐடி காவல்துறையால் ஆங்கில மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.[6]. இது தற்போது லக்னவ் சிஐடி தலைமை செயலகத்தில் உள்ளது.[7] துருக்கி பிசுமில் நகரம்ககோரி நினைவகம்ககோரி ரயில் கொள்ளையில் பிசுமில், சந்திரசேகர ஆசாத் போன்றவர்கள் பங்கு கொண்டதன் நினைவாக அவர்களுக்கு ககோரியில் ஒரு நினைவகம் உள்ளது. செவ்வாய் கிரக குழிககோரி ரயில் கொள்ளையை அடுத்து அவர்களின் நினைவாக செவ்வாய் கிரக குழி ஒன்றிற்கு ககோரியின் பெயர் 1976ல் வைக்கப்பட்டுள்ளது. அந்த குழியின் இருப்பிடம் 41°48′S 29°54′W / 41.8°S 29.9°W.[சான்று தேவை] பிசுமிலின் பாடல்கள்இந்தியக் கவிஞரான எம். எல். வர்மா பண்டிட் ராம் பிரசாத் பிசுமில் - எழுதுகோல் மற்றும் துப்பாக்கிப் போராளி என்னும் இலக்கிய கட்டுரையை இந்திய சர்வதேச இசை அரங்கத்தில் 27 பிப்ரவரி 1985ல் வெளியிட்டார்.[8] தில்லி பல்கலைக்கழகத்தின் நவீன ஐரோப்பிய மொழித்துறை வெளியிட்ட இவ்விலக்கியத்தில் பிசுமில் இயற்றிய 4 பாடல்கள் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டன.[9] அவை,
திரைப்படம்தி லெசன்ட் ஆஃப் பகத் சிங் மற்றும் ரங்தே பசந்தி ஆகிய திரைப்படங்களில் முறையே கனேசு யாதவ் மற்றும் அதுல் குல்கர்ணி ஆகியோர் பிசுமில் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் பிசுமில் இயற்றிய பாடல்கள் சாகீத் மற்றும் சில திரைப்படங்களில் பாடப்பட்டுள்ளது. குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia