விக்கிப்பீடியா:2015 மதுரை புத்தகத் திருவிழாவில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்
ஆண்டுதோறும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெறும் புத்தகக் திருவிழாக்களில் முதன் முறையாக, மதுரை புத்தகத் திருவிழாவில் தமிழ் விக்கிப்பீடியாவிற்காக ஒரு அரங்கு திறக்கப்பட்டது. 28, ஆகத்து 2015 அன்று மாலை, மதுரை புத்தகத் திருவிழா 2015 தொடங்கியது. 29 ஆகத்து 2015 முதல் தமிழ் 07 செப்டம்பர் 2015 வரை விக்கிப்பீடியாவிற்கான அரங்கு திறக்கப்பட்டிருந்தது.
'ப' வடிவில் (அல்லது ஆங்கில எழுத்து 'U' வடிவில்) கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. ஓவ்வொரு நாளும் பார்வையாளர்கள் வருகை சுழற்ச்சி முறையில் மாற்றி அமைக்கப்பட்டது.
அரங்கு எண் இன்னும் நமக்கு கிடைக்கவில்லை.
இன்று வெளியே (இது தினமும் உள்ளே, வெளியே என்று மாறும்) செல்லும் வழியில் இடப்புறமாக இரண்டாவது அரங்கு, தமிழ் விக்கிப்பீடியாவிற்கானது.
தமிழ் விக்கிப்பீடியா குறித்த சுவரொட்டி தயார் செய்யப்பட்டு, நமது அரங்கில் ஒட்டப்பட்டது.
நமது அரங்கத்திற்குத் தேவையான பெயர்ப்பலகைகள், நாற்காலிகள் மற்றும் மேசை ஏற்பாடு செய்யப்பட்டு முறையாக வைக்கப்பட்டுள்ளது.
திருவிழாவில் உள்ள கடைகளுக்கான அடையாள அட்டை வாங்கப்பட்டுள்ளது, இனிவரும் காலங்களில் நமது விக்கிப்பீடியா தன்னார்வலர்கள் அரங்கில் உள்ள போது இதை அணிய வேண்டும். இரண்டு அடையாள அட்டைகள் தற்போது நம்மிடம் உள்ளது, அதிகமாக தேவையெனில் அலுவலகத்தில் அட்டையொன்றிற்கு ரூ.60/- கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
30, ஆகத்து 2015
இன்று உள்ளே (இது தினமும் உள்ளே, வெளியே என்று மாறும்) செல்லும் வழியில் வலப்புறமாக இரண்டாவது அரங்கு, தமிழ் விக்கிப்பீடியாவிற்கானது.
ஞாயிறு என்பதால் இன்று சற்று கூட்டம் உள்ளது.
31, ஆகத்து 2015
01, செப்டம்பர் 2015
02, செப்டம்பர் 2015
இன்று வெளியே.
கடைசி கடை.
வழக்கமான கூட்டம்.
06, செப்டம்பர், 2015
ஞாயிறு, அதிகமான தமிழ் விக்கிப்பீடியர்கள் கலந்துகொண்ட நாள் இன்று. வெளியே செல்லும் வழியில் இருந்தபோதும், அதிகமான மக்கள் கூட்டம் இருந்தது, விக்கிப்பீடியா மட்டுமின்றி பிற விக்கித்திட்டங்கள் குறித்தும் பொதுமக்களுக்கும், ஆசிரியர்களுக்கும் விளக்கப்பட்டது.
தமிழ் இணையக்கல்விக் கழக இயக்குநர் த. உதயச்சந்திரன் அவர்கள் நமது அரங்கிற்கு வருகை புரிந்தார், அதுமட்டுமின்றி சிறப்பு அழைப்பாளராக இன்றைய நிகழ்வுகளில் பங்களித்த அவர், விக்கிப்பீடியா குறித்தும், கணித்தமிழ்ப் பேரவை குறித்தும் மேடையில் பேசினார்.
07, செப்டம்பர், 2015
அரங்கமைப்பில் இன்று முதல் அரங்கமாக தமிழ் விக்கிபீடியா. செப்டம்பர் 06 ஆம் நாளைய நிகழ்வின்போது தமிழ் இணையக்கல்விக் கழக இயக்குநர் த. உதயச்சந்திரன் அவர்கள் விக்கிபீடியா குறித்து குறிப்பிட்டதாலும், ஆங்கில இந்து நாளிதழில் விக்கிபீடியா குறித்த செய்தி வெளிவந்தாலும் இன்று நமது அரங்கைத் தேடி வந்து, சிலர் குறிப்பிட்டு விசாரித்தனர். அதில் ஆங்கிலம் பயிற்றுவிக்கும் ஆசிரியை ஒருவரும் அடக்கம்.
பத்திரிகைகளில் விக்கிப்பீடியா அரங்கு குறித்தான தகவல்கள்
தினமணி நாளிதழின் சென்னைப் பதிப்பில், விக்கிப்பீடியா அரங்கு குறித்தான ஒரு தகவல் வெளியானது; இந்த வாரம் எனும் பகுதியில் கலாரசிகன் இந்தக் கட்டுரையை எழுதியிருந்தார். இங்கு இணைக்கப்பட்டுள்ள பக்கத்தின் அடிப்பாகத்தில் இந்தக் கட்டுரையை காணலாம். (Zoom செய்து படிக்கவும்)
தினமலரில் வெளியான கட்டுரை சந்தேகம் கேட்கணுமா... 'ஆலமரத்தடி' வாங்க:புத்தக கண்காட்சியில் 'தமிழ் விக்கிபீடியா'