விகிதாச்சார அளவில் வெள்ளீயத்தையும் பாசுபரசையும் சேர்த்து 580 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்து வெள்ளீயம் முப்பாசுபைடு தயாரிக்கப்படுகிறது.
பண்புகள்
வெள்ளீயம் முப்பாசுபைடு முக்கோணப் படிக அமைப்பில் படிகமாக்குகிறது. R3m என்ற இடக்குழுவில் a = 7.378Å மற்றும் c = 10.512Å என்ற அலகு செல் பரிமாணங்கள் கொண்ட ஆறு வாய்பாட்டு அலகுகள் கொண்ட படிகக் கட்டமைப்பை ஏற்றுக்கொள்கிறது.[2][3]
H2O மற்றும் HCl ஆகிய கரைப்பான்களில் வெள்ளீயம் முப்பாசுபைடு கரையாது. ஆனால் HNO3 அமிலத்தில் கரையும்.[4]
பயன்கள்
SnP3 உயர் செயல்திறன் ஆற்றல் சேமிப்பு சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது.[5][6]
மேற்கோள்கள்
↑Jacobson, Carl Alfred; Hampel, Clifford A. (1946). Encyclopedia of Chemical Reactions (in ஆங்கிலம்). Reinhold Publishing Corporation. p. 15. Retrieved 28 March 2024.