எஸ். ஜே. தம்பையா என அழைக்கப்படும் ஸ்டான்லி ஜெயராஜா தம்பையா (Stanley Jeyaraja Tambiah; 16 சனவரி 1929[2] - 19 சனவரி 2014[3])என்பவர் சமூக மானிடவியலாளரும்[4]ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின்ஓய்வுபெற்ற பேராசிரியரும் ஆவார்.[5] இவரது ஆய்வுத் துறைகள்: இனத்துவம், இனமுரண்பாடுகள், பௌத்தம், வன்முறையின் மானிடவியல், இனக்குழுமங்களின் வரலாறு, தாய்லாந்து, இலங்கை, மற்றும் தமிழர் போன்றன. இவர் ஆசியப் படிப்புகளுக்கான அமைப்பின் (Association for Asian Studies) முன்னாள் தலைவருமாவார். மானிடவியல் ஆய்வுகளுக்காக இவருக்கு 1997ம் ஆண்டிற்கான பல்சான் பரிசு வழங்கப்பட்டது.
நவம்பர்1997 இல், "தென்கிழக்காசியாவில் இனவன்முறைகள் ஏற்படுவதற்கான சமூக-மானுடவியல் காரணங்களுக்கான ஆய்வுகளுக்காகவும், பௌத்தம் தொடர்பான ஆய்வுகளுக்காகவும்" புகழ்பெற்ற பால்சான் பரிசை பெற்றார்[4],[6].
2000 ஆம் ஆண்டில் பிரித்தானிய அக்காதெமியின் Corresponding Fellow ஆனார்[10]. இது சர்வதேசரீதியில் மானிடவியல் மற்றும் சமூகவியல் ஆய்வுகளில் புகழ் பெற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது[11].
இவரது நூல்கள்
Sri Lanka: Ethnic Fratricide and the Dismantling of Democracy
World Conqueror and World Renouncer : A Study of Buddhism and Polity in Thailand against a Historical Background (Cambridge Studies in Social and Cultural Anthropology). Cambridge University Press, 1976. பன்னாட்டுத் தரப்புத்தக எண்0-521-29290-5.
Magic, Science and Religion and the Scope of Rationality (Lewis Henry Morgan Lectures). Cambridge University Press, 1990. பன்னாட்டுத் தரப்புத்தக எண்0-521-37631-9.
Buddhism Betrayed? : Religion, Politics, and Violence in Sri Lanka (A Monograph of the World Institute for Development Economics Research). University of Chicago Press, 1992. பன்னாட்டுத் தரப்புத்தக எண்0-226-78950-0.
Leveling Crowds : Ethnonationalist Conflicts and Collective Violence in South Asia. (Comparative Studies in Religion and Society). University of California Press, 199. பன்னாட்டுத் தரப்புத்தக எண்0-520-20642-8.
பேராசிரியர் எஸ். ஜே. தம்பையா நீண்ட சுகவீனத்தை அடுத்து 2014 சனவரி 19 இல் ஐக்கிய அமெரிக்காவில்மாசச்சூசெட்ஸ், கேம்பிரிட்ச் நகரில் காலமானார். இவருக்கு மனைவி மேரி. எச். தம்பையா, மற்றும் ஜொனத்தன், மேத்தியூ ஆகிய இரு மகன்மார் உள்ளனர்.[3]
↑ 2.02.1Anthony, Peterson. "Stanley Tambiah". Anthropology Biography Web. Emuseum @ Minnesota State University, Mankato. Archived from the original on 2007-10-18. Retrieved 2007-08-19.