ஸ்டீவன் ஸ்பில்பேர்க்
ஸ்டீவன் ஆலென் ஸ்பில்பேர்க், (டிசம்பர் 18, 1946) அன்று சின்சினாட்டி நகரில் அமெரிக்காவில் பிறந்தார்.அப்பா கணினி தயாரிப்பில் ஈடுபட்ட மின்னியல் பொறியியலாளர்,அம்மா உணவு விடுதிகளில் பியானோ வாசிப்பாளர் ஆக இருந்தார். ஸ்பீல்பெர்க் அப்பா செல்லம்.அப்பா தன் உடைந்த ஸ்டில் காமிராவை அளித்தது தான் இவர் வாழ்வில் மிகப்பெரிய உந்துதல்.[4] சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கார் விருதினை பெற்ற அமெரிக்கத் திரைப்பட இயக்குநரும், திரைப்படத் தயாரிப்பாளருமாவார். சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதிற்காக ஆறு முறை பரிந்துரைக்கப்பட்ட இவர் ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட் மற்றும் சேவிங் பிறைவேட் றையன் ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கான சிறந்த இயக்குநர் ஆஸ்கார் விருதுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. ஸ்டீவன் ஸ்பில்பேர்க் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ரீம்வேர்க்ஸ் எஸ்கேஜியினைத் தனது நண்பர்களின் உதவியுடன் ஆரம்பித்தார். மேலும் திரைப்படமல்லாது பல தொலைக் காட்சித் தொடர்களையும், நிகழ்பட ஆட்டங்களின் திரைக்கதைகளினையும் தயாரித்து இயக்கவும் செய்தவர். திரைப்படங்கள்முதல் படைப்புகள்
புற இணைப்புகள்![]() விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: Steven Spielberg
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia