மகி கந்தா முகமை
மகி கந்தா முகமை (Mahi Kantha) பிரித்தானிய இந்தியாவிற்கு கீழிருந்த சுதேச சமஸ்தானங்களை கண்காணிக்கும் பிரித்தானிய இந்தியாவின் முகமைகளில் ஒன்றாகும். இந்த முகமை பம்பாய் மாகாணத்தின் ஆளுநரின் கீழ் செயல்பட்டது. 1933-ஆம் ஆண்டில் மகி கந்தா முகமையை மேற்கு இந்தியா முகமையுடன் இணைக்கப்பட்டது. [1]1901-ஆம் ஆண்டில் மகி கந்தா முகமையின் பரப்பளவு 8094 சதுர கிலோ மீட்டர் மற்றும் மக்கள் தொகை 3,61,545 ஆக இருந்தது. வரலாறுஇரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர், 1811-ஆம் ஆண்டு முதல் மேற்கு இந்தியாவில் மராத்தியப் பேரரசு வலு இழந்த காலத்தில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் பரோடா இராச்சியம் மற்றும் மகி கந்தா பகுதிகளிலுள்ள இராச்சியங்களிடமிருந்து திறை வசூலித்தனர். துணைப்படைத் திட்டத்தை ஏற்ற மகி கந்தா பகுதி இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பம்பாய் மாகாணத்தின் மகி கந்தா கந்தா முகமையின் கீழ் செயல்பட்டது. முதல் நிலை முதல் நான்காம் நிலை மகி கந்தா இராச்சிய மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர். 1933-ஆம் ஆண்டில் மகி கந்தா முகமை மற்றும் பனஸ்கந்தா முகமை மற்றும் பாலன்பூர் முகமைகள் ஒன்றிணைக்கப்பட்டது. இந்த முகமை பிரித்தானிய இந்தியாவின் பம்பாய் மாகாணத்தின் கீழ் இருந்தது. 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி மகி கந்தா முகமை கலைக்கப்பட்டது. மகி கந்தா முகமையில் இருந்த இராச்சியங்கள் 1948-ஆம் ஆண்டில் பம்பாய் மாகாணத்துடன் இணக்கப்பட்டது. 1956-இல் மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, இராச்சியம் குஜராத் மாநிலத்தில் இணைக்கப்பட்டது. மகி கந்தா முகமையின் கீழிருந்த சுதேச சமஸ்தானங்கள்![]() முதல் நிலை சமஸ்தானம்
இரண்டாம் நிலை சமஸ்தானம்
துப்பாக்கி குண்டுகள் மரியாதை இல்லாத சுதேச சமஸ்தானங்கள்மூன்றாம் நிலை சுதேச சமஸ்தானங்கள்
நான்காம் நிலை சுதேச சமஸ்தானங்கள் =
ஐந்தாம் நிலை சுதேச சமஸ்தானங்கள்
ஆறாம் நிலை & ஏழாம் நிலை சுதேச சமஸ்தானங்கள்![]() விஜயநகர சமஸ்தானம் உள்ளிட்ட 14 ஆறாம் நிலை சுதேச சமஸ்தானங்களும், 12 ஏழாம் நிலை சுதேச சமஸ்தானங்களும் இருந்தன. ஜமீதார்கள்பல ஜமீன்தார்கள் பரோடா இராச்சியத்த்தினர் மூலம் பிரித்தானிய இந்தியாவின் மகி கந்தா முகமைக்கு திறை செலுத்தினர்.[2] இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia