பரோடா மற்றும் குஜராத் முகமை
பரோடா மற்றும் குஜராத் முகமை (Baroda and Gujarat States Agency) பிரித்தானிய இந்தியாவின் முகமைகளில் ஒன்றாகும். இதன் முக்கியப் பணி பரோடா அரசு மற்றும் குஜராத் முகமையில் உள்ள சுதேச சமஸ்தானங்களிலிருந்து ஆண்டுதோறும் நிலவரியை வசூலித்து மும்பை மாகாண ஆளுநருக்கு அனுப்பி வைத்தல் ஆகும்.[1]மேலும் இந்த முகமையாளர் பஞ்சமகால் மாவட்டத்தின் ஆட்சியராகவும் செயல்படுவார். இந்த முகமையின் தலைமையிடம் பரோடா நகரம் ஆகும். வரலாறு![]() 1933-ஆம் ஆண்டில் பரோடா அரசு உள்ளிட்ட சுதேச சமஸ்தானங்கள் பரோடா முகமை, ரேவா கந்தா முகமை மற்றும் சூரத் முகமை, கைரா முகமை மற்றும் தானா முகமைகளை ஒன்றிணைத்து பரோடா மற்றும் குஜராத் முகமை உருவாக்கப்பட்டது.[2] பரோடா மற்றும் குஜராத் முகமையை 5 நவம்பர் 1944 அன்று பரோடா, குஜராத் மற்றும் மேற்கிந்திய முகமை]]யுடன் இணைக்கப்பட்டது. 1947-இல் இந்திய விடுதலையின் போது இம்முகமையில் இருந்த பகுதிகள் மும்பை மகாணத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் 1956-இல் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, இம்முகமையின் பகுதிகள் குஜராத் மற்றும் மகாராட்டிரா மாநிலத்துடன் இணக்கப்பட்டது. இதனையும் காண்க
மேற்கோள்கள்வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia