அறந்தாங்கி நிஷா
அறந்தாங்கி நிஷா (இயற்பெயர்: நிஷா: பிறப்பு 12 அக்டோபர் 1983) [3] இந்தியாவின் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியை சேர்ந்த திரைப்பட நகைச்சுவை நடிகையும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருமாவார், பெரும்பாலும் தமிழ்த் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துள்ள இவர்,, மாரி 2 (2018), ஆண் தேவதை மற்றும் திருச்சிற்றம்பலம் (2022) போன்ற படங்களில் சிறப்பாக தன்னுடைய நடிப்பை வெளிக்காட்டியதற்காக பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டுள்ளார்.[4] நகைச்சுவை நடிகையாக, மேடை பேச்சாளாராக, தொகுப்பாளராக என எண்ணூற்றுக்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ள இவரை, சின்னத்திரை நயன்தாரா என்று அன்புடன் பொதுமக்களும் சக கலைஞர்களும் அழைத்துவருகிறார்கள் . கலக்க போவது யாரு (2015), சகலை vs ரகளை (2018), கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் (2018), ராமர் வீடு (2019), திரு அண்ட் திருமதி சின்னத்திரை (சீசன் 1) (2019) குக் வித் கோமாளி (2019-2020), பிக் பாஸ் (சீசன் 4) (2020), பிக் பாஸ் ஜோடிகள்(சீசன் 1) (2021), நகைச்சுவை ராஜா கலக்கல் ராணி (2021), ஸ்டார் கிட்ஸ் (2021), பாரதி கண்ணம்மா (2021), திரு மற்றும் திருமதி சின்னத்திரை (சீசன் 4) (2022) மற்றும் விஜய் சபை (2022) போன்ற பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பாளராக நிஷா, பங்கெடுத்துள்ளார். ஆரம்ப கால வாழ்க்கைஅறந்தாங்கி நிஷா 1983 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி தமிழ்நாட்டின் புதுக்கோட்டையில் அறந்தாங்கியில் பிறந்தவர்.[5] தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இவர் முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர். பள்ளி நாட்களில் இருந்தே, நகைச்சுவையாக பேசி மக்களை கவர்ந்துள்ள இவர், குழந்தை பருவத்திலேயே நடிக்க விரும்பியுள்ளார். கலைத்துறைநிஷா, 2015 ஆம் ஆண்டு விஜய் டிவியின் நகைச்சுவை யதார்த்த நிகழ்ச்சியான கலக்க போவது யாருவில் போட்டியாளராக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அறிமுகமாயுள்ளார். அந்த போட்டி நிகழ்ச்சியில் இரண்டாமிடம் பிடித்ததோடு, நடுவர்களிடமும் பார்வையாளர்களிடமும் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.[6] அந்த நிகழ்ச்சிக்கு பின்னர், தமிழ்த் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று,[7] 2018 ஆம் ஆண்டில் மாரி 2 திரைப்படத்தில் நடிகர்கள் தனுஷ் மற்றும் சாய் பல்லவியுடன் அட்டு ஆனந்தி என்ற பாத்திரத்தில் சிறப்பாக நகைச்சுவை கதாபாத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார். பின்னர் இரும்புத்திரை (2018), கோலமாவு கோகிலா (2018) மற்றும் சீமராஜா (2018) போன்ற பல்வேறு படங்களில் நடித்ததோடு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார், 2019 , திரு அண்ட் திருமதி சின்னத்திரை (சீசன் 1) மற்றும் 2020 ஆம் ஆண்டில் குக் வித் கோமாளி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பின்னர் 2020 ஆம் ஆண்டில் யதார்த்த நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் (சீசன் 4) இல் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டு எழுபதாவது நாள் வரை போட்டியிட்டு வெளியேறியுள்ளார். அதன் பின்னர் ஹாஸ்டல் (2022), திருச்சிற்றம்பலம் (2022) மற்றும் ட்ரிக்கர் (2022) போன்ற படங்களில் நடித்துள்ளார்.[8][9] தற்போது வசந்தபாலன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிகர்கள் அர்ஜுன் தாஸ் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோருடன் நடித்து வருகிறார். படத்தில் துணை வேடத்தில் நிஷா நடித்துள்ளார்.[10][11] இப்படம் 2023-ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாக உள்ளது. திரைப்படவியல்திரைப்படங்கள்
தொலைக்காட்சி
விருதுகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia