அலுமினியம் ஆண்டிமோணைடு
அலுமினியம் ஆண்டிமோணைடு ( Aluminium antimonide ) (AlSb) என்பது தனிம வரிசை அட்டவணையில் குழுக்கள் III மற்றும் V இல் உள்ள தனிமங்களான அலுமினியமும் ஆண்டிமனியும் சேர்ந்த ஒரு குறை மின்கடத்தியாகும். இதனுடைய நெய்யரி மாறிலி 0.61 நானோ மீட்டர் ஆகும். திடப்பொருளுக்குள் இருக்கும் எலக்ட்ரானின் ஆற்றல் வீத அளவீட்டின்படி இதனுடைய மறைமுக பட்டை இடைவெளி தோராயமாக 1.6 எலக்ட்ரான் வோல்ட்டு ஆகவும் அதே சமயத்தில் நேரடி பட்டை இடைவெளி 2.22 எலக்ட்ரான் வோல்ட்டு ஆகவும் இருக்கிறது. 300 பாகை கெல்வின் வெப்பநிலையில் இதன் எலக்ட்ரான் இயக்கம் அல்லது மின்னணு நகர்திறன் 200 cm²•V−1•s−1 மற்றும் இதனுடைய மின்துளை நகர்திறன் 400 cm²•V−1•s−1 ஆகும். மேலும் இதன் ஒளிவிலகல் எண் 2 µm அலைநீளத்தில் 3.3 ஆக்வும் மற்றும் அதன் மின்கடத்தாப் பொருள் மாறிலி 10.9 நுண்ணலை அலைவெண்ணாகவும் [1] உள்ளது. III மற்றும் V குழுவிலுள்ள பிற தனிமங்களுடன் அலுமினியம் ஆண்டிமோணைடு சேர்ந்து கலப்புலோகங்கள் AlInSb, AlGaSb மற்றும் AlAsSb போன்ற முத்தனிமச் சேர்மங்களைத் தருகிறது. ஆண்டிமோணைடு அயனியின் (Sb3-)குறைக்கும் போக்கு காரணத்தால் அலுமினியம் ஆண்டிமோணைடு எரிதகு பண்பைக் கொண்டுள்ளது. இது எரிந்து அலுமினியமொட்சைட்டு மற்றும் ஆண்டிமனிமூவொட்சைட்டு ஆகியவற்றைத் தயாரிக்க உதவுகிறது. இவற்றையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia