அல்டோஸ்டீரோன்
அல்டோஸ்டீரோன் (Aldosterone) என்னும் இஸ்டீராய்டு இயக்குநீர் கனிமக் கார்ட்டிக்காய்டுக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இது, அண்ணீரகச் சுரப்பியிலுள்ள அட்ரீனல் புறணியின் வெளிப்புறப் பகுதியிலிருந்து உருவாகிறது[1][2]. அல்டோஸ்டீரோன் முதன்மையாக சிறுநீரகத்தியின் சேய்மையிலுள்ள நுண்குழல்கள், சேகரிக்கும் நாளங்கள் ஆகியவற்றின் மீது செயலாற்றியும், சிறுநீரகங்களில் அயனிகளையும், நீரையும் வேகமாக மீளுறிஞ்சுவதைத் தூண்டுவதன் மூலமாகவும், சோடியம் அயனிகளைப் பாதுகாத்தும், பொட்டாசியம் அயனிகளைச் சுரந்தும், அதிகமாக நீரைத் தக்கவைத்துக் கொண்டும், இரத்த அழுத்தத்தை அதிகரித்தும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைப்பதில் முக்கியமானப் பங்காற்றுகிறது[1]. கட்டுப்பாடற்ற நிலையில் நோயைத் தூண்டக்கூடிய அல்டோஸ்டீரோன் இதயக்குழலிய, சிறுநீரக நோய்கள் உருவாவதிலும், விருத்தியடைவதிலும் பங்கேற்கிறது[2]. இதயச் சுரப்பான இதயியச் சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு செயற்பாட்டிற்கு எதிராக அல்டோஸ்டீரோன் செயல்படுகின்றது[1]. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia