நார்எபிநெப்ரின்
நார்எபிநெப்ரின் (Norepinephrine, NE) (குறுக்கம்: நார்எபி), அல்லது நார்அட்ரினலின் என்பது ஒரு இயக்குநீராகவும், நரம்புக்கடத்தியாகவும் செயற்படும் கேட்டகோலமைன் (catecholamine) ஆகும்[3]. நார்எபிநெப்ரினை உற்பத்தி செய்யும் அல்லது பாதிப்படையும் நம் உடலின் பகுதிகள் நார்அட்ரீனல்வினையியப் (noradrenergic) பகுதிகள் என்றழைக்கப்படுகின்றன. நார்அட்ரினலின் (இலத்தீன்), நார்எபிநெப்ரின் (கிரேக்கம்) ஆகிய குறிச்சொற்கள் பரிமாற்றம் செய்யத்தக்கவையே என்றாலும், உலகின் பல பகுதிகளிலும் நார்அட்ரினலின் என்ற பெயரே பொதுவாக உபயோகப்படுத்தப்படுகிறது. இருந்தபோதிலும், குழப்பத்தைத் தவிர்க்கவும், நிலைத்திறனை அடையவும் மருத்துவ வல்லுநர்கள்[4] நார்எபிநெப்ரின் என்னும் பெயரையே ஏற்ற பெயர்முறையாக பரிந்துரைத்துள்ளார்கள். இதயத்தைத் தாக்கும் பரிவு நரம்பணுக்களிலிருந்து வெளிப்படும் நரம்புக் கடத்தி செயலே நார்எபிநெப்ரினின் முதன்மையான பணிகளுள் ஒன்றாகும். பரிவு நரம்புத் தொகுதியிலிருந்து அதிகமாக வெளிப்படும் நார்எபிநெப்ரின், இதயம் சுருங்கும் வீதத்தை அதிகரிக்கின்றது[5]. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia