குருதிக்குழலியக்க குடலியப்புரதக்கூறுகுருதிக்குழலியக்க குடலியப்புரதக்கூறு (Vasoactive intestinal peptide, VIP) அல்லது குருதிக்குழலியக்க குடலியப்பல்புரதக்கூறு என்றழைக்கப்படும் புரதக்கூற்று இயக்குநீர் 28 அமினோ அமிலங்களைக் கொண்டதாகும். இது, ஜி-புரதம் பிணைந்த சமிக்ஞை ஏற்பிகளின் ஈந்தணைவியான குளூக்ககான்/செக்ரெடின் உயர்குடும்பத்தைச் சேர்ந்த நரம்பியப் புரதக்கூறாகும்[1]. இப்புரதக்கூறு முதுகெலும்பிகளில் குடல், கணையம், ஐப்போத்தலாமசு போன்ற பல திசுக்களில் உற்பத்தி செய்யப்படுகிறது[2][3]. இதயம் சுருங்கு திறனைத் தூண்டுதல், தந்துகிகளை விரிவடையச் செய்தல், கிளைக்கோசன் சிதைவை அதிகரித்தல், தமனிக் குருதியைக் குறைத்தல், இரைப்பை, பித்தப்பை, மூச்சுப் பெருங்குழாய் ஆகியவற்றின் மென் திசுக்களைத் தளர்வுற செய்தல் ஆகியப் பணிகளை குருதிக்குழலியக்க குடலியப்புரதக்கூறு செய்கிறது. மனிதர்களில் இப்புரதக்கூறு வி.ஐ.பி. என்னும் மரபணுவால் குறியாக்கம் செய்யப்படுகிறது[4]. இரத்தத்தில் இதன் அரைவாழ்வுக் காலம் (t½) ஏறக்குறைய இரண்டு நிமிடங்களாகும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia