வளர்ச்சியூக்கத் தடுப்பி![]() வளர்ச்சியூக்கத் தடுப்பி (Somatostatin) என்னும் ஒரு புரதக்கூற்று இயக்குநீரானது "ஜி"-புரதமிணைந்த வளர்ச்சியூக்கத் தடுப்பி-ஏற்பிகளுடனான செயல்விளைவுகள் மூலமாகவும், பல்வேறு இரண்டாம்பட்ச இயக்குநீர்களின் வெளிப்பாட்டைத் தடுப்பதின் மூலமாகவும், அகச்சுரப்பித் தொகுதி சுரப்புகளைச் சீரமைப்பதிலும் நரம்புக் கடத்துமை, உயிரணுப் பெருக்கம் ஆகிய செயற்பாடுகளைப் பாதிப்பதிலும் பணியாற்றுகின்றது. இந்த வளர்ச்சியூக்கத் தடுப்பியானது வளர் இயக்குநீரைத் தடுக்கும் இயக்குநீர் (growth hormone-inhibiting hormone; GHIH) அல்லது வளர்ச்சியூக்க இயக்குநீர் வெளிப்பாட்டைத் தடுக்கும் காரணி (somatotropin release-inhibiting factor; SRIF) அல்லது வளர்ச்சியூக்க இயக்குநீர் வெளிப்பாட்டைத் தடுக்கும் இயக்குநீர் (somatotropin release-inhibiting hormone)[1] எனவும் அழைக்கப்படுகின்றது. ஒற்றை முன்சார்புரதம் (preproprotein) மாற்று பிளவடைவதால், வளர்ச்சியூக்கத் தடுப்பி இரண்டு செயற்படு வடிவங்களில் உள்ளது: ஒன்று 14 அமினோ அமிலங்களுடனும், மற்றொன்று 28 அமினோ அமிலங்களுடனும் காணப்படுகின்றது[2]. அனைத்து முதுகெலும்பிகளிலும் ஆறு வெவ்வேறான (SS1, SS2, SS3, SS4, SS5, SS6) வளர்ச்சியூக்கத் தடுப்பி மரபணுக்கள் உள்ளன[3]. இத்தகு ஆறு வெவ்வேறான மரபணுக்களும், ஐந்து வெவ்வேறான ஏற்பிகளும் இருப்பதால், வளர்ச்சியூக்கத் தடுப்பியானது பலதரப்பட்ட செயற்பாடுகளைக் கொண்டிருக்க ஏதுவாகிறது[4] மனிதர்களில் இதற்கு ஒரேயொரு மரபணு (SST) மட்டுமே உள்ளது[5][6][7]. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia