ஆஸ்டியோகால்சின்![]() ஆஸ்டியோகால்சின் (Osteocalcin) [மற்றொரு பெயர்: எலும்பு காமா-கார்பாக்சி குளுடாமிக் அமிலம் கொண்ட புரதம் (bone gamma-carboxyglutamic acid-containing protein; BGLAP)], எலும்பு, பல் மூலப் பகுதிகளில் காணப்படும் ஒரு நார்த்திசுவற்ற புரதமாகும். மனிதர்களில் இப்புரதம் நிறப்புரி 1- ல் உள்ள ஒரு (BGLAP) மரபணுவால் குறியாக்கம் செய்யப்படுகிறது[1][2]. இதனுடைய ஏற்பி (GPRC6A) ஜி-புரதம் பிணைக்கப்பட்ட ஒன்றாகும்[3]. அத்திமூலச்செல்கள் மட்டுமே ஆஸ்டியோகால்சினைச் சுரக்கின்றன. எனவே, எலும்பு வளர்சிதைமாற்ற நெறிபடுத்தலில் (எலும்பு மற்றும் அதன் செல்கள் உருவாக்கத்தில்) இது பங்கேற்பதாகக் கருதப்படுகிறது[4]. எலும்பு கனிமமாக்கலிலும், கால்சியம் அயனிகளின் சமநிலையைப் பேணுவதிலும் தொடர்பு கொண்டதாக உள்ளது. ஆஸ்டியோகால்சின் உடலில் ஒரு இயக்குநீரைப்போலச் செயற்படுகிறது: கணைய பீட்டா உயிரணுக்களிலிருந்து அதிகளவு இன்சுலினை வெளியிடச் செய்யும் அதேவேளையில் கொழுப்புச் செல்களிலிருந்து, இன்சுலினிற்கான உணர்திறனை அதிகரிக்கச் செய்யும் அடிப்போனெக்டின் என்னும் இயக்குநீரை வெளியிடச் செய்கிறது[4]. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia