இதயியச் சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு![]() ![]() திறன்மிகு நாள விரிப்பியான (Vasodilator) இதயியச் சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு [Atrial natriuretic peptide; (ANP), atrial natriuretic factor; (ANF), atrial natriuretic hormone; (ANH), Cardionatrine, Cardiodilatine; (CDD), atriopeptin], இதயத்தசைச் செல்களால் சுரக்கப்படும் புரதக்கூற்று இயக்குநீராகும்[2][3][4]. இப்புரதக்கூறானது உடலின் நீர், சோடியம், பொட்டாசியம், கொழுப்புத் திசுக்களில் உள்ள கொழுப்பு ஆகியவற்றின் சமநிலையைக் கட்டுபடுத்துவதில் ஈடுபட்டுள்ளது; இரத்தத்தின் கன அளவு அதிகரிக்கும்போது இதய மேலறையிலுள்ள தசைச் செல்களால் வெளியிடப்படுகிறது; இரத்தச் சுற்றோட்டத்தில் நீர், சோடியம், கொழுப்பு அளவுகளைக் குறைப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது[2]. சிறுநீரகக்குழல் வலைப்பின்னல் மண்டலத்தினால் (zone glomerulosa) சுரக்கப்படும் இஸ்டீராய்டு இயக்குநீரான அல்டோஸ்டீரோனின் செயற்பாடுகளுக்கு எதிர்மறையான பண்புகளைக் கொண்டுள்ளது[5]. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia