ஆண்டவரே, இரக்கமாயிரும் (செபம்)![]() ஆண்டவரே, இரக்கமாயிரும் என்னும் செபமானது கத்தோலிக்க திருச்சபையில் குறிப்பாக திருப்பலியிலும், மன்றாட்டுமாலைகளின் துவக்கத்திலும் பயன்படுத்தப்படும் செபமாகும். இது பெரும்பாலும் பாடலாகவே பாடப்படுவது வழக்கம். இச்செபத்தின் ஒருவகை மரபுவழித்திருச்சபைகளில் மனவலி செபமாக பயன்படுத்தப்படுவது வழக்கம். திருப்பலிக்கு முன் மன்றாட்டுமாலை செபிக்கும் வழக்கிலிருந்து இச்செபம் திருப்பலியில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்பது அறிஞர் கூற்று. இப்பதமானது கிறித்தவர்களுக்கு முன்பே பலராலும் பயன்படுத்தப்பட்டாலும் கிறித்தவத்தின் தொடக்கமுதலே கிறித்தவர்களால் இது பயன்படுத்தப்பட்டு வந்தது.[1] 6ம் நூற்றாண்டில் திருத்தந்தை பெரிய கிரகோரி மேற்கத்திய கிறித்தவம் மற்றும் கிழக்கத்திய கிறித்தவத்தில் இப்பாடல் பாடப்படுவதில் உள்ள வேறுபாட்டை தன் எழுத்துகளில் குறிப்பிட்டுள்ளார்.[1][2] செபம்திருப்பலியில் மன்னிப்பு வழிபாட்டின் இருதியில் இது செபிக்கப்படுவது வழக்கம். இச்செபத்தின் பின்வரும் இரு வகைகளில் ஒன்றினை பயன்படுத்தலாம்.
அல்லது
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia