இலத்தீன் மொழியின் இப்பாடல், கட்டளை செப புத்தகம் (திருப்புகழ் மாலை)
மரியாவின் பாடல் என்று அழைக்கப்படும் பாடல் லூக்கா நற்செய்தியில் இயேசுவின் தாய் மரியாள், திருமுழுக்கு யோவானின் தாயான எலிசபெத்தைச் சந்தித்த போது கடவுளை போற்றிப் பாடியப் பாடலாகும். இது மிகப் பழைய எட்டுக் கிறித்துவப் பாடல்களுல் ஒன்றாகும். இது பல கிறித்துவப் பிரிவிகளின் வழிபாட்டில் பயன் படுத்தப்படுகின்றது.[1][2] இப்பாடலை, இதன் இலத்தீன் மொழியின் துவக்க வார்த்தையான மேக்னிஃபிகாத் (Magnificat ) என்று ஆங்கிலத்திலும் மேலும் பல மொழிகளிலும் அழைப்பர்.
இப்பாடலின் வரிகள் லூக்கா நற்செய்தியில் இடம் பெறுகின்றது (Luke 1:46-55). இது மரியாள் எலிசபெத்தைச் சந்தித்த போது பாடப்படுகின்றது.[1] இப்படலைக்கேட்கும் போது எலிசபெத்து திருமுழுக்கு யோவானை ஆறு மாதம் கருத்தரித்திருந்தார்.
இப்பாடல் நிக்காராகுவா நாட்டு உழவர்களிடையே மிகவும் பெயர்போனது. அவர்கள் இப்படல் பொறிக்கப்பட்ட காப்பை எப்போது அணிந்திருப்பர். இதனாலேயே சோமோசா காலங்களின் உழவர்கள் சோமோசாவுக்கு ஓட்டு போட்டதர்க்கான சீட்டை எப்போதும் வைத்திருக்க ஆணையிடப்பட்டது. ஆகவே இதனை கேலிசெய்யும் விதமாக இதனையும் மேக்னிஃபிகாத் (இலத்தீனில் இப்பாடலின் பெயர்) என அழைத்தனர்..[5]
இப்பாடலுக்கு தர்கால இசை வடிவம் "Let Morning Shine" என்னும் ரிச்சர்டு வுவின் பாடல் தொகுப்பில் இடம் பெருகின்றது. இது தென் கொரியாவின் விடுதலைக்காக இயற்றப்பட்டது ஆகும்.[6]