பெர்னார்டின் செபம் அல்லது மிகவும் இரக்கமுள்ள தாயே (இலத்தீன்: Memorare, O piissima Virgo Maria, ஆங்கிலம்: Remember O Most Gracious Virgin Mary ) எனத்துவங்கும் செபம் கத்தோலிக்க திருச்சபையில்தூய கன்னி மரியாவை நோக்கி சொல்லப்படும், மிகவும் புகழ் பெற்ற செபமாகும்.[1] இச்செபமானது இலத்தீனிலும் ஆங்கிலத்திலும் அதன் துவக்க வார்த்தைகளான Remember மற்றும் Memorare என்னும் வார்த்தைகளால் அறியப்படுகின்றது.
இச்செபமானது 12ஆம்-நூற்றாண்டில் வாழ்ந்த சிஸ்டேரியன் சபைத் துறவியான புனித பெர்னார்டு (Saint Bernard of Clairvaux) என்பவரால் இயற்றப்பட்டது என பலராலும் தவறாக நம்பப்படுகின்றது. தமிழில் சிலர் முதன் முதலில் பெர்னதெத் சுபீரு கன்னிமரியிடம் வேண்டின செபம் இது எனவும் தவறாக நம்புகின்றனர். ஆயினும் இது உண்மையில் 17ஆம்-நூற்றாண்டில் வாழ்ந்த அருட்தந்தை கிலௌடு பெர்னார்டு என்பவரால் தன் தந்தையிடம் படிப்பினை பெற்று பலருக்கு அறிமுகம் செய்யப்பட்ட செபம் ஆகும்.
↑Raccolta, #339 (S. C. Ind., Dec. 11, 1846; S. P. Ap., Sept. 8, 1935) Encr. Ind. #32:
↑Fti, Brother Anthony Josemaria (2008-11-30). The Blessed Virgin Mary in England Vol. 1: A Mary-Catechism with Pilgrimage to Her Holy Shrines. iUniverse. p. 329. ISBN9780595500741.