ஆண்டிமனி முச்செலீனைடு
ஆண்டிமனி முச்செலீனைடு (Antimony triselenide) என்பது Sb2Se3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பொதுவாக இச்சேர்மம் கந்தக அணைவுக் கனிமம் ஆண்டிமோசெலைட்டு வடிவில் காணப்படுகிறது. செஞ்சாய்சதுரப் படிக இடக்குழுவில் [2] படிகமாகும் இச்சேர்மத்தில் ஆண்டிமனி 3+ ஆக்சிசனேற்ற நிலையிலும், செலீனியம் 2- ஆக்சிசனேற்ற நிலையிலும் காணப்படுகின்றன. ஆனால் உண்மையில் இச்சேர்மத்தில் பிணைப்பு உயர் சகப்பிணைப்பாக இருக்கிறது. இதனால் இச்சேர்மமும் இதனுடன் தொடர்புடைய பிறவும் கருப்பு நிறத்தால் பிரதிபலிக்கக் கூடியதாகவும் குறைகடத்திப் பண்புகளைப் பெற்றவையாகவும் காணப்படுகின்றன[3]. ஆண்டிமனியும் செலீனியமும் வினைபுரிவதால் ஆண்டிமனி முச்செலீனைடு உருவாகிறது. பயன்பாடுமெல்லிய ஏடு சூரிய மின்கலங்களில் பயன்படுத்துவதற்கு Sb2Se3 தற்போது தீவிரமாக ஆராயப்படுகிறது. வெற்றிகரமாக 5.6% செயல்திறன் சான்றிதழும் பெற்றுள்ளது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia