ஆண்டிமனி சல்பேட்டு
ஆண்டிமனி சல்பேட்டு (Antimony sulfate) என்பது Sb2(SO4)3, என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஆண்டிமனி அல்லது அதன் சேர்மங்கள் சூடான கந்தக அமிலத்துடன் சேர்ந்து வினைபுரியும் போது நீருறிஞ்சும் சேர்மமான ஆண்டிமனி சல்பேட்டு உருவாகிறது. குறைகடத்திகளுடன் கலக்கவும் பட்டாசுத் தொழிலில் வெடிபொருள்கள் தயாரிக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது[1] அமைப்புமுடிவில்லாத நான்முக SO4 ஏணிகள் மற்றும் மூலைகளில் பகிர்ந்து கொண்டுள்ள SbO3 பட்டைக்கூம்புகள் ஆகியன ஆண்டிமனி சல்பேட்டில் உள்ளன. பெரும்பாலும் இச்சேர்மம் கலப்பு ஆக்சைடு (Sb2O3.3SO3) என்று விவரிக்கப்படுகிறது.[3] வேதிப்பண்புகள்ஆண்டிமனி மற்றும் கந்தக அமிலம் சேர்ந்து உருவாவதால் சிலசமயங்களில் ஆண்டிமனி சல்பேட்டு ஓர் உப்பு என்றும் அழைக்கப்படுகிறது. ஆண்டிமனி சல்பேட்டானது ஆக்சிசனேற்றும் அமிலமான நைட்ரிக் அமிலத்தில் கரையும் போது ஓர் நைட்ரேட்டு உருவாவதில்லை, ஆனால் ஆண்டிமனி ஆக்சைடுகளின் கலவை உருவாகிறது என்பது கவனிக்கத்தக்கது ஆகும். இப்பண்பினால் இது பிசுமத்தில் இருந்து மாறுபடுகிறது. பிசுமத் இவ்விரு அமிலங்களிலும் கரைந்து உப்புகளை உருவாக்குகிறது[4]. ஆண்டிமனி சல்பேட்டு நீருறிஞ்சும் தன்மையும் அமிலங்களில் கரையக் கூடியதாகவும் உள்ளது. ஆண்டிமனி, ஆண்டிமனி மூவாக்சைடு, ஆண்டிமனி முச்சல்பைடு அல்லது ஆண்டிமனி ஆக்சிகுளோரைடு ஆகியவற்றை சூடான அடர் கந்தக அமிலத்தில் கரைத்து இச்சேர்மம் தயாரிக்கப்படுகிறது[1][4]
பயன்கள்கரைதல் பண்பின் காரணமாக இச்சேர்மம் குறைகடத்திகளில்[5]கலப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. மின்னாற்பகுப்பில் பயன்படும் எதிர்மின் வாய்களின் மீது மேல் பூச்சாக பூசவும் , பட்டாசுத் தொழிலில் வெடிபொருள்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.[1] பாதுகாப்புதோல் மற்றும் சளிச்சவ்வுகளின் மீது ஆண்டிமனி சல்பேட்டு படநேர்ந்தால் எரிச்சல் ஏற்படும்.[6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia