ஆண்டிமனி பென்டாசல்பைடு
ஆண்டிமனி பென்டாசல்பைடு (Antimony pentasulfide) என்பது S5Sb2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஆண்டிமனியும் கந்தகமும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் ஆண்டிமனி சிவப்பு என்ற பெயராலும் அறியப்படுகிறது. பகுதிப்பொருள்கள் வெவ்வேறு அளவுகளில் இணைந்து விகிதச்சமமற்று இச்சேர்மம் உருவாகிறது. மேலும் இச்சேர்மத்தின் சரியான கட்டமைப்பு அறியப்படவில்லை[2]. வர்த்தக மாதிரிகள் பெரும்பாலும் கந்தகத்தை மாசாகப் பெற்றுள்ளன. சாக்சுலெட் வடிகட்டிப் பிரிப்பானில் உள்ள கார்பன் டை சல்பைடு கரைசலில் கழுவுதல் மூலம் இக்கந்தகத்தைப் பிரித்தெடுக்கலாம். தயாரிப்புஆண்டிமனியுடன் கந்தகத்தைச் சேர்த்து 250 – 400 பாகை செல்சியசு வெப்பநிலையில், மந்தமாம வளிமண்டல அழுத்தத்தில் வினைபுரியச் செய்தால் ஆண்டிமனி பென்டாசல்பைடு உருவாகிறது. பயன்கள்சிவப்புச் சாயமாக ஆண்டிமனி பென்டாசல்பைடு பயன்படுத்தப்படுகிறது. சிக்கிலிப்சு உப்பு எனப்படும் சோடியம் தயோஆண்டிமோனியேட்டு (Na3SbS4,) தயாரிப்பதற்கான முன்னோடி சேர்மமாகவும் இது பயன்படுகிறது. இவ்வினைக்கான சமன்பாடு: 3 Na2S + Sb2S5 + 9 H2O → 2 Na3SbS4•9H2O இயற்பியல் பண்புகள்பல சல்பைடுகளைப் போல ஆண்டிமனி பென்டாசல்பைடும் ஐதரோ குளோரிக் அமிலம் போன்ற வலிமையான அமிலங்களுடன் சேர்த்து சூடாக்கும் போது ஐதரசன் சல்பைடை வெளிவிடுகிறது[3]. 6 HCl + Sb2S5 → 2 SbCl3 + 3 H2S + 2 S மோசுபாவுர் நிறமாலையியல் ஆண்டிமனி பென்டாசல்பைடு ஒரு ஆண்டிமனி(III) வழிப்பொருள் என பகுப்பாய்வு செய்கிறது. இதனால் அமிலமாக்கலின் போது ஆண்டிமனி(V) குளோரைடுக்குப் பதிலாக ஆண்டிமனி(III) குளோரைடு உருவாகிறது[4]. இதிலிருந்து பாசுபரசு(V) சேர்மமான பாசுபரசு பென்டாசல்பைடின் ஓரினவரிசைச் சேர்மமாக ஆண்டிமனி பென்டாசல்பைடு இல்லை என்பது உறுதியாகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia