ஆண்டிமனி தெலூரைடு
ஆண்டிமனி தெலூரைடு (Antimony telluride) என்பது Sb2Te3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சாம்பல்நிற படிகத்திண்மமான இச்சேர்மத்தின் உருகுநிலை, அடர்த்தி, நிறம் போன்ற பண்புகள் இச்சேர்மம் ஏற்கும் படிகவடிவத்திற்கு ஏற்ப மாறுபடுகின்றன. தொகுப்பு முறை தயாரிப்புஆண்டிமனியுடன் தெலுரியம் 500- 900 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரிந்து ஆண்டிமனி தெலூரைடு உருவாகிறது [1]. 2Sb(நீ) + 3Te(நீ) → Sb2Te3(நீ) பயன்கள்ஆண்டிமனி, பிசுமத் போன்ற தனிமங்களின் மற்ற இரட்டை சால்கோகெனைடுகள் போல ஆண்டிமனி தெலூரைடும் இதனுடைய குறைகடத்திப் பண்புகளுக்காக ஆராயப்படுகிறது. இதனுடன் பொருத்தமான மாசு கலக்கப்பட்டு என் – வகை, பி – வகை குறைகடத்திகள் தயாரிக்கப்படுகின்றன [1]. போலியிரட்டை உலோகமிடை திட்ட அமைப்பில் செருமேனியம்-ஆண்டிமனி-தெலூரியம் உடன் செருமேனியம்-தெலூரைடு உருவாகிறது (GeTe) [3]. பிசுமத் தெலூரைடு (Bi2Te3,) போலவே ஆண்டிமனி தெலூரைடும் பெரிய அளவில் வெப்பமின் விளைவைக் கொண்டுள்ளது. இதனால் திடநிலை குளிரூட்டிகளில் பயன்படுத்தப்படுகிறது [1]. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia