ஆண்டிமனி மூவயோடைடு( Antimony triiodide) என்பது (SbI3) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மாணிக்கச் சிவப்பிலான இத்திண்மம் மட்டுமே ஆண்டிமனி தனிமத்தின் அடையாளப்படுத்தப்பட்ட ஒர் இரும அயோடைடு ஆகும். அதாவது முழு சேர்மமும் (SbxIy) என்ற வாய்ப்பாட்டுக்குள் தனிப்படுத்தப்படுகிறது. இது ஆண்டிமனியை +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் கொண்டுள்ளது. கனமான முதன்மைக்குழு தனிமங்களின் பல அயோடைடுகள் போல இவற்றின் கட்டமைப்புகள் அவற்றின் திட, திண்ம மற்றும் வாயு நிலைகளைச் சார்ந்திருக்கின்றன. வலுவளவு ஓட்டு இலத்திரன் சோடிகளின் தள்ளுகைக் கொள்கையில் எதிர்பார்த்தபடியே, வாயுநிலை (SbI3) மூலக்கூறு சார்ந்த ஒரு பட்டைக்கூம்பு வகைக் கட்டமைப்புடையதாகும். திண்ம நிலையில் ஆண்டிமனி (Sb) மையங்கள் ஆறு அயோடைடு ஈந்தணைவிகளால் ஆக்கப்பட்ட ஒர் எண்முகத்திண்மமாக இருந்தாலும், மூன்று ஈந்தணைவிகள் நெருக்கமாகவும் மூன்று ஈந்தணைவிகள் அதிக இடைவெளியுடனும் காணப்படுகின்றன[5] . ஆனால், இதனை ஒத்த சேர்மமான பிசுமத்து அயோடைடு (BiI3 ) இல் ஆறு பிசுமத்து – அயோடைடு (Bi—I) பிணைப்பு இடைவெளிகளும் சமமாகவே உள்ளன[6].
தயாரிப்பு
ஆண்டிமனியுடன் தனிமநிலை அயோடின் வினைபுரிந்து அல்லது ஆண்டிமனி மூவாக்சைடுடன்ஐதரயோடிக் அமிலம் வினைபுரிந்து ஆண்டிமனி மூவயோடைடு உருவாகிறது. கொதிக்கும் பென்சீன் அல்லது நாற்குளோரோயீத்தேன் சேர்மத்தில் ஆண்டிமனி மற்றும் அயோடின் இடைவினை புரிவதாலும் ஆண்டிமனி மூவயோடைடை மாற்று வழிமுறையில் தயாரிக்கலாம்.
பயன்கள்
வெப்பமின் பொருட்களில் கலப்பு மாசுவாக ஆண்டிமனி மூவயோடைடு பயன்படுத்தப்படுகிறது[7]
↑Seidell, Atherton; Linke, William F. (1952). [Google BooksSolubilities of Inorganic and Organic Compounds]. Van Nostrand. Retrieved 2014-05-29. {{cite book}}: Check |url= value (help)
↑D.-Y. Chung, T. Hogan, P. Brazis, M. Rocci-Lane, C. Kannewurf, M. Bastea, C. Uher, M. G. Kanatzidis (2000). "CsBi4Te6: A High-Performance Thermoelectric Material for Low-Temperature Applications". Science287 (5455): 1024–7. doi:10.1126/science.287.5455.1024. பப்மெட்:10669411.