இந்தியாவின் நிர்வாக அலகுகள்
இந்தியாவின் நிர்வாக அலகுகள் (Administrative divisions of India), இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் இந்தியாவை நிர்வகிக்க 4 அடுக்கு கொண்ட நிர்வாக அலகுகள் உள்ளது. அவைகள்:
இந்தியா முழுமைக்கும் நிர்வகிக்க இந்திய அரசும், மாநில & ஒன்றியப் பகுதிகளை நிர்வகிக்க மாநில மற்றும் ஒன்றியப் பகுதி அரசுகளும், மாவட்டங்களை நிர்வகிக்க இஆப தரத்தில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களும், உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் தலைமையில் குழுக்களும், ஊராட்சிப் பகுதிகளை நிர்வகிக்க மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சி தலைவர்கள் தலைமையில் குழுக்கள் உள்ளது. ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலஙகளில் வருவாய் வட்டங்களுக்கு மாற்றாக மண்டல்கள் எனும் நிர்வாக அலகுகள் உள்ளது. தன்னாட்சி நிர்வாகப் பகுதிகள்இந்தியாவின் மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடிகள் நிறைந்த வடகிழக்கு இந்தியா மற்றும் லடாக் போன்ற பகுதிகளின் மலை மாவட்டங்களை நிர்வகிக்க மலைவாழ் பழங்குடி மக்களைக் கொண்ட தன்னாட்சி நிர்வாகக் குழுக்கள் செயல்படுகிறது. இதனையும் காண்கஇந்தியாவின் புவியியல் பகுதிகள்இந்தியாவின் வரலாற்றுப் பகுதிகள்
மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia