இலங்கை தேசிய வாக்கெடுப்பு, 1982
இலங்கை மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பு, இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக டிசம்பர் 22, 1982ல் நடைபெற்றது. சனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனா அப்போதைய நாடாளுமன்றத்தின் (நாடாளுமன்றம்) பதவிக்காலத்தை மேலும் ஆறாண்டுகளுக்கு நீடிப்பதற்காகவே மக்களின் விருப்பத்தைக்கோரி இந்த வாக்கெடுப்பினை நடத்தினார். அரசறிவியலில் பயன்படுத்தப்படும் அடிப்படை எண்ணக்கருக்களுள் ஒன்றாக விளங்கும் மக்கள் தீர்ப்பு என்பது சனநாயகத்தின் ஓர் அங்கமாகக் கருதப்படுகின்றது. மக்கள் தீர்ப்பு (referendum) ஒப்பங்கோடல் எனும்போது அரசியலமைப்பு ஏற்பாடுகள், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளின் போது பொது மக்களின் விருப்பு வெறுப்புக்களை மக்கள் மூலமாகவே அறிந்துகொள்ளும் வழிமுறை என பொருள் கொள்ளப்படுகிறது. வரலாறுஅரசியல் நிர்வாகத்தில் பொதுமக்களையும் தொடர்புபடுத்த வேண்டும் என்ற கருத்தினை ஜெக்குலின் ஜின் ரூசோ 1762ல் முன்வைத்தார். 'தனது பிரதிநிதிகள் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் அரசாங்க செயற்பாடுகளைப் பொது மக்களின் விருப்பத்திற்கமைய செயற்படுத்துவது பயனுறுதி வாய்ந்தவையாகும" என்பது இவரின் வாதமாகும். 1793ல் பிரான்சிய அரசியலமைப்பில் 'மக்கள் தீர்ப்பு' எனும் அம்சம் முதன் முதலாக இடம்பெறலாயிற்று. இலங்கையின் சட்ட ஏற்பாடுகள்1978ம் ஆண்டு அரசியலமைப்பில் காணப்படும் சனநாயத்தன்மை மிக்க ஓர் அம்சமாக இது கருதப்படுகிறது. 1978ம் ஆண்டு அரசியலமைப்பின் கீழ் மக்கள் தீர்ப்புக்கான சட்டவிதிகளைப் பின்வருமாறு தொகுத்து நோக்கலாம்.
அந்த உறுப்புரைகளாவன1ம் உறுப்புரை:
2ம் உறுப்புரை:
3ம் உறுப்புரை
6ம் உறுப்புரை
7ம் உறுப்புரை
8ம்உறுப்புரை
9ம் உறுப்புரை
10ம் உறுப்புரை
11ம் உறுப்புரை
30(2) உறுப்புரை
62(2) உறுப்புரை
மேற்குறித்த விடயங்களில் மாற்றங்களை அல்லது திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமாயின் மக்கள் தீர்ப்புக்கு விடப்படல் வேண்டும். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள்மேலும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளின் போது மக்களின் தீர்ப்பிற்காக குறித்த பிரச்சினையை முன்வைக்கும் அதிகாரம் சனாதிபதிக்கு உண்டு. மக்கள் தீர்ப்பிற்கு சமர்ப்பிக்கும் வழிமுறைசனாதிபதி மக்கள் தீர்ப்பிற்காக சமர்ப்பிக்கும் வழிமுறை (சுருக்கமாக) 1. மக்கள் தீர்ப்பிற்காக அமைச்சரவை சான்றுரை அளித்துள்ள அல்லது. 2. மக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள ஏதேனுமொன்று. இவை நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையின் குறித்த சட்டமூலத்தை மக்கள் தீர்ப்புக்காக சானாதிபதி சமர்ப்பிப்பார்.
தேர்தல் ஆணையாளர்சனாதிபதியால் மக்கள் தீர்ப்புக்கான அறிவிப்பு விடுக்கப்பட்ட பின் மக்கள் தீர்ப்பு தேர்தலை நடத்தும் பொறுப்பு தேர்தல் ஆணையாளரைச் சார்ந்தது. 1978ம் ஆண்டு அரசியலமைப்பு சட்டவிதிகள், 1981 - 7ம் இலக்க நாடாளுமன்ற சட்டமூலம் என்பவற்றுக்கு இணங்க இத்தேர்தல் நடத்தப்படுதல் வேண்டும். 'ஆம்' 'இல்லை'1981 - 7ம் இலக்க நாடாளுமன்ற சட்டமூலத்துக்கிணங்க மக்கள் தீர்ப்புக்காக விடப்படும் பிரேரணை வினா வடிவில் முன்வைக்கப்படுதல் வேண்டும். அவ்வாறாயின் வாக்காளர் அப்பிரேரணைக்கு விருப்பமாயின் 'ஆம்' எனவும் விருப்பமில்லையெனில் 'இல்லை' எனவும் வாக்கினை வழங்குதல் வேண்டும். வாக்குச் சீட்டில் 'ஆம்' 'இல்லை' என்ற சொற்கள் மும்மொழியிலும் அச்சிடப்பட்டிருக்கும். 'ஆம்' என்ற சொல்லுடன் 'விளக்கு' அடையாளமும் 'இல்லை' என்ற சொல்லுடன் 'குடம்' என்ற அடையாளமும் அச்சிடப்பட்டிருத்தல் அவசியமாகும். இலங்கை மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்புஇலங்கை அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக டிசெம்பர் 22, 1982 இல் நடைபெற்றது. சனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனா அப்போதைய நாடாளுமன்றத்தின் (நாடாளுமன்றம்) பதவிக்காலத்தை மேலும் ஆறாண்டுகளுக்கு நீடிப்பதற்காகவே மக்களின் விருப்பத்தைக்கோரி இந்த வாக்கெடுப்பினை நடத்தினார். தேர்தல் முடிவுநாடாளுமன்றத்தின் (நாடாளுமன்றம்) பதவிக்காலத்தை மேலும் ஆறாண்டுகளுக்கு நீடிப்பதற்கான விருப்பம் ஆம் - (ஆதரவாக) விளக்கு சின்னம் - 3,141,223 (54.66%) இல்லை - (எதிராக) குடம் சின்னம் - 2,605,983 (45.34%) செல்லுபடியான வாக்குகள் - 5,747,206 (99.63%) நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 21,456 (0.37%) அளிக்கப்பட்ட வாக்குகள் - 5,768,662 அளிக்கப்பட்ட வாக்கு விகிதம் - 70.82% பதியப்பட்ட மொத்த வாக்குகள் - 8,145,015 முடிவுஇதன்படி நாடாளுமன்றத்தின் (நாடாளுமன்றம்) பதவிக்காலம் மேலும் ஆறாண்டுகளுக்கு நீடிக்கப்பட்டது உசாத்துணை
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia