இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1947
இலங்கையின் 1வது நாடாளுமன்றத் தேர்தல் 1947 ஆம் ஆண்டு ஆகத்து 23 முதல் செப்டம்பர் 20 நடைபெற்றது. இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு 95 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய இத்தேர்தல் நடத்தப்பட்டது. சுதந்திர இலங்கையின் முதலாவது தேசிய தேர்தல் இதுவாகும். பிரித்தானிய இலங்கைக்கு விடுதலை வழங்கப்பட முன்னரேயே இத்தேர்தல் நடைபெற்றது. இதுவே சோல்பரி அரசியலமைப்பின் கீழ் நடத்தப்பட்ட முதலாவது தேர்தல் ஆகும். தேர்தல்கள் 1947 ஆகத்து 23, 25, 26-29, செப்டம்பர் 1, 4, 6, 8-11, 13, 15, 16-18 ஆகிய நாட்களில் நடத்தப்பட்டன.[1] 9 அரசியற் கட்சிகளின் சார்பாக 179 பேரும், 182 சுயேட்சை வேட்பாளர்களுமாக மொத்தம் 361 பேர் போட்டியிட்டனர்.[1] பிரித்தானிய இலங்கையில் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த பல முக்கிய அரசியல் தலைவர்கள் இத்தேர்தலில் பங்கெடுத்தனர். டி. எஸ். சேனநாயக்கா தலைமையிலான வலதுசாரிக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி முக்கிய கட்சியாக இருந்தது. எதிரணியில் திரொட்ஸ்கியக் கட்சி லங்கா சமசமாஜக் கட்சி, இந்திய போல்செவிக்-லெனினியக் கட்சி, இலங்கை பொதுவுடமைக் கட்சி, இலங்கை இந்தியக் காங்கிரஸ், மற்றும் பல சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வட, கிழக்கு மாகாணங்களில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் போட்டியிட்டது. புத்தளம் தொகுதியில் எஸ். எச். எம். இஸ்மாயில் (ஐதேக) போட்டியின்றித் தெரிவானதால், 94 இடங்களுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது. இவற்றில் கொழும்பு மத்தி, அம்பலாங்கொடை, கடுகண்ணாவை, பதுளை, பலாங்கொடை ஆகியவை பல உறுப்பினர்கள் கொண்ட தொகுதிகள். இவ்விடங்களில் இருந்து மொத்தம் 11 பேர் தெரிவானார்கள்.[1] பின்னணிடொனமூர் அரசியல் சீர்திருத்த விசாரணைக் குழுவில் சிபார்சின்படி, 1931 ஆம் ஆண்டில் இலங்கை மக்கள் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. டொனமூர் அரசியலமைப்பு 1931 சூன் முதல் 1947 ஆகத்து வரை நடைமுறையில் இருந்த காலப்பகுதியில் 1931 சூன் மாதத்திலும், 1936 மார்ச் மாதத்திலும் இரண்டு பொதுத்தேர்தல்கள் நடைபெற்றன. இரண்டாம் உலகப் போர் காரணமாக 1941 இல் நடைபெற வேண்டிய பொதுத்தேர்தல்கள் கைவிடப்பட்டன.[2] இலங்கை முழுமையான விடுதலை பெறவில்லை, பதிலாக டொமினியன் அந்தஸ்தையே பெற்றது. நாட்டின் இராணுவ நிலைகள் பிரித்தானியாவின் கீழேயே இருந்தன. நாட்டின் அதிகாரபூர்வ மொழியாக ஆங்கிலமே தொடர்ந்து இருந்து வந்தது. முடிவுகள்ஒரு உறுப்பினர் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டார். ஏனைய 94 இடங்களுக்கும் 360 பேர் போட்டியிட்டனர்.[2] கட்சி அடிப்படையில் தேர்தல் முடிவுகள் வருமாறு:
டி. எஸ். சேனநாயக்காவின் ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மையைப் பெறாததால், தமிழ்ப் பகுதிகளில் 7 இடங்களைப் பெற்றுக் கொண்ட தமிழ் காங்கிரசுக் கட்சியினருடன் இணைந்து அரசு அமைத்தது. இலங்கை இந்திய காங்கிரஸ் மலையகத்தில் ஆறு இடங்களைக் கைப்பற்றியது. மகாதேசாதிபதியால் நியமிக்கப்பட்ட 6 பேர் அடங்கலாக, மொத்தம் 101 பேர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாயினர். இவர்களில் கிரியுள்ள தொகுதியில் இருந்து புளொரன்ஸ் சேனநாயக்க என்ற பெண் தெரிவானார்.[1] பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் டி. எஸ். சேனநாயக்க இலங்கையின் முதலாவது பிரதமராக 1947 மே 26 அன்று நியமிக்கப்பட்டார். இவர் தமிழ் காங்கிரசு, தொழிலாளர் கட்சி, மற்றும் சுயேட்சைகள் சிலரின் ஆதரவில் அரசாங்கத்தை அமைத்தார். 14 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.[1] இலங்கை நாடாளுமன்றத்தின் மேலவையான மூதவைக்கு பிரதிநிதிகள் சபையிலிருந்து 15 பேரும், மகாதேசாதிபதியால் நியமிக்கப்பட்ட 15 பேருமாக மொத்தம் 30 பேர் நியமனம் பெற்றனர். சேர் ஒலிவர் குணதிலகா இதன் தலைவராகத் தெரிவானார்.[1] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia