இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1952
இலங்கையின் 2வது நாடாளுமன்றத் தேர்தல் 1952 மே 24 முதல் மே 30 வரை நடைபெற்றது. இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு 95 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய இத்தேர்தல் நடத்தப்பட்டது. பின்னணிஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும் பிரதமருமான டி. எஸ். சேனநாயக்கா மார்ச் 1952 இல் இறந்ததை அடுத்து அவரது மகன் டட்லி சேனநாயக்கா கட்சித் தலைவராகவும், இடைக்காலப் பிரதமரும் ஆனார். ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்த சிங்களத் தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட இலங்கை சுதந்திரக் கட்சி இத்தேர்தலில் முதல் தடவையாகப் போட்டியிட்டது. இதே போல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஐதேக ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்ததனால் அக்கட்சியில் இருந்து எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில் பிரிந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியினரும் முதல் தடவையாகப் போட்டியிட்டனர். முடிவுகள்இலங்கையின் மலையகத் தமிழரின் குடியுரிமை பறிக்கப்பட்டமையினால் அவர்களின் ஒரேயொரு அரசியல் கட்சியான இலங்கை இந்தியக் காங்கிரஸ் இத்தேர்தலில் போட்டியிட முடியவில்லை. லங்கா சமசமாஜக் கட்சியினர் இத்தேர்தலில் 9 இடங்களையே பெற்றுத் தோல்வியுற்றனர். ஐதேக பெரும்பான்மையிடங்களைக் கைப்பற்றியது.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia