இலங்கையின்நாடாளுமன்றத் தேர்தல்கள் (Parliamentary elections) 17-வது நாடாளுமன்றத்திற்காக (இலங்கைக் குடியரசின் 10-வது நாடாளுமன்றத்திற்காக) 225 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 2024 நவம்பர் 14 இல் நடைபெற்றது. இலங்கையின் 16-வது நாடாளுமன்றம் 2024 செப்டம்பர் 24 இல் கலைக்கப்பட்டது.[3][4][5] புதிய நாடாளுமன்றத்திற்கான வேட்பாளர் நியமனப் பத்திரங்கள் 2024 அக்டோபர் 4 முதல் 11 வரை ஏற்றுக்கொள்ளப்பட்டன.[6][7]
தேர்தல் முடிவு, அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுத்தலைவர் அனுர குமார திசாநாயக்க தலைமையிலான இடதுசாரி தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு மகத்தான வெற்றியாக அமைந்தது.[8] தேசிய மக்கள் சக்தி 159 இருக்கைகளை வென்றது, வரலாற்றில் எந்தவொரு இலங்கை அரசியல் கட்சியையும் விடவும், நாட்டின் வரலாற்றில் இரண்டாவது அதிக விகிதமான இருக்கைகளைப் பெற்றுள்ளது, அத்துடன் மட்டக்களப்பு தவிர்ந்த அனைத்து மாவட்டங்களிலும் இது வெற்றி பெற்றது. 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தனிக் கட்சியொன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற முதல் தேர்தல் இதுவாகும். முதன்முறையாக யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசிய அரசியல் கட்சி அல்லாத ஒரு கட்சியாக அது வெற்றி பெற்றது.[9] இந்தத் தேர்தலில் 21 பெண் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டமை, இலங்கையின் நாடாளுமன்ற வரலாற்றில் அதிகூடிய பதிவாகும்,,[10] மேலும் 150 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[11]
இந்த நிகழ்வுகள் கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறி அரசுத்தலைவர் பதவியைத் துறக்க வழிவகுத்தது, அதே நேரத்தில் மகிந்த ராசபக்சவும் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.[16][17]ரணில் விக்கிரமசிங்க தொடக்கத்தில் பிரதமராக நியமிக்கப்பட்டார், பின்னர் கோத்தபய ராஜபக்சவின் பதவி விலகலைத் தொடர்ந்து பதில் அரசுத்தலைவரானார். 2022 சூலை 20 இல் நடந்த நாடாளுமன்ற வாக்கெடுப்பில், கோட்டாபயவின் எஞ்சிய பதவிக் காலத்தை நிறைவு செய்யும் பணிக்காக விக்கிரமசிங்க இலங்கையின் 9-வது அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[18]
1981 ஆம் ஆண்டின் 1-ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின்படி, இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள் என்றாலும், அரசுத்தலைவர் அதன் முதல் கூட்டத்திலிருந்து இரண்டரை ஆண்டுகளின் பின்னர் அல்லது நாடாளுமன்றத்தில் தீர்மானம் பெற்ற பிறகு அதைக் கலைக்க முடியும். ஆகத்து 2025 இல் திட்டமிடப்பட்டிருந்த போதும், திசாநாயக்க, தனது அரசியலமைப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி தேர்தல் உறுதிமொழியை நிறைவேற்றி, 2024 செப்டம்பர் 21 அன்று நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.[20][21][22]
தேர்தல் முறைமை
நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்கள் ஐந்தாண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 196 உறுப்பினர்கள் 22 பல-உறுப்பினர்கள் கொண்ட தேர்தல் மாவட்டங்களில் இருந்து திறந்த பட்டியல் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்; வாக்காளர்கள் தாங்கள் வாக்களிக்கும் கட்சிப் பட்டியலில் மூன்று வேட்பாளர்களை விருப்பத் தெரிவு மூலம் வரிசைப்படுத்தலாம்.[23] ஏனைய 29 இடங்கள் தேசியப் பட்டியலிலிருந்து தெரிவுசெய்யப்பட்டு, கட்சியின் செயலாளர்களால் நியமிக்கப்பட்ட பட்டியல் அங்கத்தவர்கள் மற்றும் கட்சி பெறும் நாடளாவிய விகிதாசார வாக்குகளின்படி இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
நாடாளுமன்றத்தைக் கலைக்கும் ஒவ்வொரு பிரகடனமும் வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும், வேட்புமனு தாக்கல் காலம், தேர்தல் தேதி ஆகியனவும் குறிப்பிடப்பட வேண்டும். புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் முந்தைய நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள் நிகழ வேண்டும்.[24]
18 வயதிற்கு மேற்பட்ட இலங்கைக் குடியுரிமை பெற்ற ஒருவர், ஒவ்வொரு ஆண்டும் சூன் 1 அன்று எந்த இடத்தில் சாதாரண வதிவாளராக இருக்கின்றாரோ அந்த இடத்தில் தனது வாக்கைப் பதிவு செய்து கொள்ளலாம்.[25] தேர்தலில் வாக்களிப்பது கட்டாயமல்ல. ஒவ்வொரு வாக்காளரும் தத்தம் ஆளடையாளத்தை செல்லுபடியான ஆளடையாள ஆவணம் ஒன்றின் மூலம் நிரூபிக்க வேண்டும்.[25] வாக்காளர் ஒருவர் தமக்கு விருப்பமான ஒரு கட்சிக்கும், அக்கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஆகக்கூடியது மூவருக்கு தனது விருப்பத்தேர்வுகளையும் இடலாம். ஆனாலும் வேட்பாளர் விருப்பத்தேர்வு கட்டாயமானது அல்ல.[25]
தேர்தலுக்கு முன் நாடாளுமன்ற உறுப்பினர் பங்கீட்டில் மாற்றங்கள்
25 செப்டம்பர் 2024 அன்று, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை, வேட்பு மனுவில் பட்டியலிடப்பட்டுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை மற்றும் சுயேச்சைக் குழுக்களிடமிருந்து தேவைப்படும் வைப்புத் தொகை பற்றிய விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வைப்புத் தொகை செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.[26][27]
உறுப்பினர் பங்கீட்டில் மாற்றங்கள்: 2020 முதல் 2024 வரை
இலங்கைத் தேர்தல் ஆணையம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை, வேட்பு மனுவில் பட்டியலிடப்பட்டுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை, சுயேச்சைக் குழுக்களிடமிருந்து தேவைப்படும் வைப்புத்தொகை பற்றிய விவரங்களை வெளியிட்டது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வைப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.[28][29][1]
ஒவ்வொரு தேர்தல் மாவட்டம் அல்லது நகராட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெறுகின்றனர் ■ தேமக ■ ஐமக ■ ததேகூ ■ இ.பொ.ச.மு ■ ஏனைய கட்சிகள்
மொத்தம் 8,821 வேட்பாளர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்று தேர்தல் ஆணையம் 2024 அக்டோபர் 12 அன்று ஒரு ஊடக வெளியீட்டில் அறிவித்தது. இதில் 5,564 வேட்பாளர்கள் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளாகவும், 3,257 பேர் சுயேச்சைகளாகவும் போட்டியிட்டனர்.[32][33]
வாக்களிப்பு
அஞ்சல் வாக்களிப்பு
தேர்தல் ஆணையம் முதலில் 2024 அக்டோபர் 1-8 வரை அஞ்சல் மூலம் வாக்களிக்கும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டது, ஆனால் காலக்கெடு 2024 அக்டோபர் 10 இசீநே 24:00 வரை நீடிக்கப்பட்டது. தேர்தல் கடமைகளில் ஈடுபடும் முன்-அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு மட்டுமே அஞ்சல் மூலம் வாக்களிக்கும் வசதி கிடைக்கும். அங்கீகரிக்கப்பட்ட வாக்காளர்கள் 2024 அக்டோபர் 30, நவம்பர் 1, நவம்பர் 4, நவம்பர் 7-8 ஆகிய தேதிகளில் தேர்தல் ஆணையம் வழங்கிய அட்டவணையின்படி வாக்களித்தனர்.[34][35]
↑இக்கூட்டணியில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, சனநாயக இடது முன்னணி, சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்களின் அணி, மவ்பிம சனதா கட்சி, பிவிதுரு எல உறுமய ஆகியன உள்ளன.
↑"Proclamation by the President"(PDF). The Gazette Extraordinary. Department of Government Printing. 24 September 2024. Archived(PDF) from the original on 24 September 2024. Retrieved 24 September 2024.
↑Balasuriya, Darshana Sanjeewa (24 September 2024). "General election on November 14". Daily Mirror. Archived from the original on 24 September 2024. Retrieved 24 September 2024.
↑"Presidential Election – 2024"(PDF). The Gazette Extraordinary. 22 September 2024. Archived(PDF) from the original on 22 September 2024. Retrieved 22 September 2024.
↑ 36.036.1* For a comprehensive list of election results: "Parliamentary Election 2024 Results". Election Commission of Sri Lanka. 15 November 2024. Archived from the original on 20 November 2024. Retrieved 20 November 2024.