இலந்தனம் ஆக்சிகுளோரைடு

இலந்தனம் ஆக்சிகுளோரைடு
Lanthanum oxychloride
பெயர்கள்
வேறு பெயர்கள்
இலந்தனம் ஆக்சைடு குளோரைடு
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/ClH.La.O/h1H;;/q;+3;-2/p-1
    Key: STLFZIUSZCELIB-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
  • [Cl-].[Ln+3].[O-2]
பண்புகள்
LaOCl
வாய்ப்பாட்டு எடை 190.35 கி/மோல்
தோற்றம் படிகங்கள்
கட்டமைப்பு
படிக அமைப்பு நாற்கோணம்
புறவெளித் தொகுதி P4/nmm
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இலந்தனம் ஆக்சிகுளோரைடு (Lanthanum oxychloride) என்பது LaOCl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இலந்தனம், ஆக்சிசன், குளோரின் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. இலந்தனம் ஆக்சைடு குளோரைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.[1]

தயாரிப்பு

இலந்தனம் ஆக்சைடை ஐதரோகுளோரிக் அமிலத்தில் கரைத்து அதிலுள்ள தண்ணீரை ஆவியாக்கி, பின்னர் வீழ்படிவை சூடாக்குவதன் மூலம் இலந்தனம் ஆக்சிகுளோரைடைத் தயாரிக்கமுடியும்.[2]

இலந்தனம்(III) குளோரைடு சேர்மத்தை தண்ணீருடன் வினைபுரியச் செய்தாலும் இலந்தனம் ஆக்சிகுளோரைடு உருவாகும்.:[3]

LaCl3 + H2O -> LaOCl + 2HCl

இயற்பியல் பண்புகள்

P4/nmm என்ற இடக்குழுவில் நாற்கோணப் படிகத் திட்டத்தில் நியோடிமியம் ஆக்சிகுளோரைடு படிகமாகிறது.[4][5]

நிலையான காற்றில் 700 பாகை செல்சியசு வெப்பநிலையில் இலந்தனம் ஆக்சிகுளோரைடு சிதைந்து இலந்தனம் ஆக்சைடாக மாறுகிறது.[6][7]

மேற்கோள்கள்

  1. Zhu, Xiurong; Yu, Yi; Yuan, Jvjun; Zhang, Xianke; Yu, Huajun; Zhang, Wen; Du, Ai; Zhou, Bin (11 August 2017). "Synthesis, characterization and mechanism of formation of carbon aerogels incorporated with highly crystalline lanthanum oxychloride particles" (in en). RSC Advances 7 (63): 39635–39640. doi:10.1039/C7RA05454H. பன்னாட்டுத் தர தொடர் எண்:2046-2069. Bibcode: 2017RSCAd...739635Z. https://pubs.rsc.org/en/content/articlelanding/2017/ra/c7ra05454h. பார்த்த நாள்: 5 July 2025. 
  2. Wachsman, E. D. (2003). Solid-state Ionic Devices III: Proceedings of the International Symposium (in ஆங்கிலம்). The Electrochemical Society. p. 439. ISBN 978-1-56677-388-1. Retrieved 5 July 2025.
  3. Koch, Charles William (1953). Thermodynamics of the Trichlorides and Oxychlorides of Some of the Lanthanide and Actinide Elements (thesis) (in ஆங்கிலம்). Radiation Laboratory, University of California. p. 65. Retrieved 5 July 2025.
  4. Zhu, Xiurong; Hope-Weeks, Louisa J.; Ramirez, Donald; Baghi, Roya; Charles, Vanessa R.; He, Yinjie (5 September 2019). "Controllable decomposition of lanthanum oxychloride through different annealing conditions". Journal of Alloys and Compounds 800: 29–34. doi:10.1016/j.jallcom.2019.06.071. பன்னாட்டுத் தர தொடர் எண்:0925-8388. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S092583881932136X. பார்த்த நாள்: 5 July 2025. 
  5. Tian, Hao; Guo, Jincheng; Pei, Yu; Hou, Shaochun; Wang, Yuanjiang; Xia, Yumei (12 September 2024). "A synthetic method for lanthanum hydroxychloride suitable for industrialization and its thermal decomposition properties" (in en). RSC Advances 14 (40): 29282–29287. doi:10.1039/D4RA03987D. பன்னாட்டுத் தர தொடர் எண்:2046-2069. பப்மெட்:39285880. 
  6. Report [of] Joint Committee Fellowship [on] Standard X-ray Diffraction Powder Patterns to Joint Committee on Chemical Analysis by Powder Diffraction Methods (in ஆங்கிலம்). United States National Bureau of Standards. 1951. p. 24. Retrieved 5 July 2025.
  7. Circular of the National Bureau of Standards (in ஆங்கிலம்). U.S. Department of Commerce, National Bureau of Standards. 1956. p. 22. Retrieved 5 July 2025.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya