இலப்பைகுடிக்காடு
இலப்பைக்குடிக்காடு (Labbaikudikadu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்தில் உள்ள முதல் நிலை பேரூராட்சி ஆகும். அமைவிடம்பெரம்பலூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த இலப்பைகுடிக்காடு பேரூராட்சி, பெரம்பலூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது. பெரம்பலூர்–தென் ஆற்காடு மாவட்ட எல்லையாக அமைந்துள்ள வெள்ளாற்றின் தென் கரையில் அமைந்துள்ளது. மேற்கே திருமாந்துறையும், கிழக்கே கீழக்குடிக்காடும், தெற்கே பென்னக்கோணமும், பெருமத்தூரும், வடக்கே வெள்ளாறும் அதற்கடுத்து கடலூர் மாவட்டத்தின் அரங்கூரும் அமைந்துள்ளது. பேரூராட்சியின் அமைப்பு4.5 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 8 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி குன்னம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3] மக்கள் தொகை பரவல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2560 வீடுகளும், 11891 மக்கள்தொகையும் கொண்டது.[4] [5][6] போக்குவரத்துபேருந்துஇலப்பைக்குடிக்காட்டிலிருந்து சென்னை, திருச்சி , பெரம்பலூர், வ. களத்தூர், தொழுதூர், வைத்தியநாதபுரம், திட்டக்குடி, விருத்தாசலம், அரியலூர் , துங்கபுரம், அத்தியூர், வேப்பூர், குன்னம், கிழுமத்தூர்,சு. ஆடுதுறை ஊராட்சி ஆகிய ஊர்களுக்குச் செல்ல அரசு மற்றும் தனியார் பேருந்து வசதி உள்ளது. அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
அருகிலுள்ள விமான நிலையங்கள்
பள்ளிவாசல்கள்
கோயில்கள்
பள்ளிக்கூடங்கள்
மருத்துவமனைகள்
பல்துறை அரசு அலுவலகங்கள்
சந்தைஒவ்வொரு வாரமும் சனிக் கிழமை பேருந்து நிலையம் அருகே உள்ள திடலில் வாரச்சந்தை நடைபெறுகிறது. அக்டோபர் 05, 2019 முதல் ஜமாலி நகர் பூங்கா அருகே நடைபெற்று வருகின்றது. வங்கிகள்
தானியங்கி காசளிப்பு இயந்திரங்கள்
அரசியல்இலப்பைக்குடிக்காடு குன்னம் தமிழ்நாடு சட்டமன்ற தொகுதியின் கீழ் உள்ள ஊராகும். மக்களவைத் தொகுதிகளில் சிதம்பரம் தொகுதியின் கீழ் வருகிறது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia