இதுவரைக்கும் பதிமூன்று படங்கள் வெளியான நிலையில், எக்ஸ்-மென் திரைப்படத் தொடர் உலகளவில் 6 பில்லியன் டாலர்களை வசூலித்து ஏழாவது முறையாக அதிக வசூல் செய்த திரைப்படத் தொடராக திகழ்கின்றது
1994 ஆம் ஆண்டு 20ஆம் சென்சுரி பாக்ஸ் நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர் லாரன் ஷுலர் டோன்னர் எக்ஸ்-மென் கதையை திரைப்படமாக்கும் உரிமையைப் பெற்றனர்.[1] ஆன்ட்ரூ கெவின் வாக்கர் எழுத்தாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஜேம்ஸ் கேமரான் இந்தப்படத்தை தயாரிக்க விருப்பம் தெரிவித்தார்.[2] பிரையன் சிங்கர் இந்தத் திரைப்படத்தை இயக்குவதாக 1996 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். ஜான் லோகன், ஜோஸ் வெடன், எட் சாலமோன், கிறிஸ்டோபர் , மற்றும் டேவிட் ஹைடர் ஆகியோர் திரைக்கதையை அமைத்தனர்.[1][3]1999,தொராண்டோ,கனடாவில் தொடங்கப்பட்ட இத் திரைப்படம் மார்ச்,2000 ஆம் ஆண்டில் நிறைவு பெற்றது.[4] இந்த்திரைப்படம் சூலை 14 ,2000 இல் வெளியானது.[5]
எக்ஸ்-மென் 2 (2003)
இந்த பாகத்தில் கர்னல் வில்லியம் ஸ்டிரைக்கர் சிறையில் உள்ள மேக்னட்டோவை சில கேள்விகள் கேட்டு அவரை குழப்பமடையச் செய்கிறார். மேலும் சேவியரை குழப்பமடையச் செய்து செரப்ரோ இயந்திரத்தின் மூலம் உலகில் உள்ள அனைத்து விகாரிகளையும் (மியூட்டன்ட்) கொலை செய்ய திட்டம் தீட்டுகிறான். அதனை எக்ஸ்-மென்னும் அவனுடைய சகாக்களும் அதனை முறியடிக்கின்றனர்.
டேவிட் ஹைடர் மற்றும் சக் பென் ஆகியோர் திரைக்கதையை எழுதிய இந்த பாகம் திசெம்பர்,2002 ஆம் ஆண்டு வெளியானது.[6][7] மைக்கேல் தோகர்டி மற்றும் டான் ஹாரிஸ் ஆகியோர் திரைக்கதையில் மற்றம் செய்தனர். 2002 ஆம் ஆண்டு சூன் மாதம் வான்கூவரில் தொடங்கப்பட்டு 2002, அக்டோபர் மாதம் முடிவடைந்தது. 2003 ஆம் ஆண்டு மே 2 இல் இந்தத் திரைப்படம் வெளியானது.[6]