எக்ஸ்-மென்: டார்க் பீனிக்ஸ் (Dark Phoenix) என்பது 2019 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் மார்வெல் காமிக்ஸ் என்ற வரைகதை புத்தகத்தில் வெளியான எக்ஸ்-மென் என்ற ஒரு கற்பனை பாத்திரக் குழுவை மையமாக வைத்து 20ஆம் சென்சுரி பாக்ஸ், மார்வல் மகிழ்கலைக் கொம்பனி, பேட் ஹாட் ஹாரி புரொடக்ஷன்ஸ், டீ எஸ் ஜி என்டேர்டைன்மெண்ட் மற்றும் டோனர்ஸ் கொம்பனி போன்ற நிறுவனங்கள் மூலம் தயாரித்து 20ஆம் சென்சுரி பாக்ஸ் என்ற நிறுவனம் மூலம் விநியோகிக்கப்பட்டது.
இந்த புதிய பாகத்தில் நடிகை சோபி டர்னர் என்பவர் ஜீன் க்ரே எனும் பீனிக்ஸ் பறவை சக்தி கொண்ட வில்லியாக நடித்துள்ளார். எக்ஸ்மென்களில் ஒருவராக உள்ள ஜீன் க்ரேவே எக்ஸ்மென்களுக்கு வில்லியாக மாறினால் என்ன நடக்கும் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. டார்க் பீனிக்ஸ் படம் 7 ஜூன் 2019 அன்று ஐக்கிய அமெரிக்காவில் வெளியானது. இது எக்ஸ்-மென் திரைப்படத் தொடரில் மிகக் குறைந்த வசூல் செய்த படம் ஆகும்.
கதைச் சுருக்கம்
ஜீன் க்ரே நெருப்பில் விழுந்து எரிந்தாலும், மீண்டும் பறக்கும் பீனிக்ஸ் பறவை போன்ற சக்தி வாய்ந்தவள். சார்லஸ் சேவியர் தனது மூளையின் சக்தியால், ஜீன் க்ரேவின் சக்தியை உணர முயல்கிறார். இவளால் எல்லோருக்கு ஆபத்து என்ற அறிந்து கொள்ளும் சார்லஸ் தனது எக்ஸ்-மென் படையை கொண்டு எப்படி அவளை கட்டுப்படுத்த போகின்றார் என்பது தான் கதை.