எக்ஸ்-மென் 2
எக்ஸ்-மென் 2 (X2: X-Men United)[7][8] என்பது 2003 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் மார்வெல் காமிக்ஸ் என்ற வரைகதை புத்தகத்தில் வெளியான எக்ஸ்-மென் என்ற ஒரு கற்பனை பாத்திரக் குழுவை மையமாக வைத்து மார்வல் மகிழ்கலைக் கொம்பனி, பேட் ஹாட் ஹாரி புரொடக்ஷன்ஸ் மற்றும் டோனர்ஸ் கொம்பனி போன்ற நிறுவனங்கள் மூலம் தயாரித்து 20ஆம் சென்சுரி பாக்ஸ் என்ற நிறுவனம் மூலம் விநியோகிக்கப்பட்டது. இந்த திரைப்படம் 2000 ஆம் ஆண்டு வெளியான எக்ஸ்-மென் என்ற படத்தின் தொடர்சியாக வெளியானது. பிறையன் சிங்கர் என்பவர் இயக்கும் இந்த திரைப்படத்தை லாரன் ஷல்லர் டோனர் மற்றும் ரால்ப் விண்டேர் ஆகியோர் தயாரிக்க, மைக்கேல் டகெர்டி, டான் ஹாரிஸ் மற்றும் டேவிட் ஹேய்டர் ஆகியோர் திரைக்கதை எழுத, பேட்ரிக் ஸ்டீவர்ட், ஹியூ ஜேக்மன், இயன் மெக்கெல்லன், ஹாலே பெர்ரி, பாம்கே ஜான்சென், ஜேம்ஸ் மார்ஸ்டன், ரெபேக்கா ரோமெயின், பிரையன் காக்ஸ், ஆலன் கம்மிங், புரூஸ் டேவிசன், சான் ஆஷ்மோர், கெல்லி ஹு, ஆரோன் ஸ்டான்போர்ட் மற்றும் அண்ணா பகுய்ன் போன்ற பலர் நடித்துள்ளார்கள். எக்ஸ்-மென் 2 படம் ஐக்கிய அமெரிக்காவில் மே 2, 2003 அன்று வெளியிடப்பட்டது, மேலும் அதன் கதைக்களம் மற்றும் அதிரடி காட்சிகளுக்கு நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த படம் உலகளவில் 407 மில்லியன் வசூலித்தது. இந்த திரைப்படத்தின் தொடர்சியாக எக்ஸ்-மென்: த லாஸ்ட் ஸ்டேண்ட் என்ற படம் 2006 ஆம் ஆண்டு வெளியானது. தொடர்ச்சியான தொடர் திரைப்படங்கள்எக்ஸ்-மென்: த லாஸ்ட் ஸ்டேண்ட் (2006)மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia