எக்ஸ்-மென்: அப்போகலிப்ஸ்
எக்ஸ்-மென்: அப்போகலிப்ஸ் (X-Men: Apocalypse) என்பது 2016 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் மார்வெல் காமிக்ஸ் என்ற வரைகதை புத்தகத்தில் வெளியான எக்ஸ்-மென் மற்றும் அப்போகலிப்ஸ்[10] என்ற ஒரு கற்பனை பாத்திரக் குழுவை மையமாக வைத்து மார்வெல் மகிழ்கலை, பேட் ஹாட் ஹாரி புரொடக்ஷன்ஸ், டி.எஸ்.ஜி என்டர்டெயின்மென்ட் மற்றும் டோனர்ஸ் கொம்பனி போன்ற நிறுவனங்கள் மூலம் தயாரித்து 20ஆம் சென்சுரி பாக்ஸ் என்ற நிறுவனம் மூலம் விநியோகிக்கப்பட்டது. இது எக்ஸ்-மென் திரைப்படத் தொடரின் ஒன்பதாவது படம் ஆகும். பிறையன் சிங்கர் என்பவர் இயக்கும் இந்த திரைப்படத்தில் ஜேம்ஸ் மாக்கவோய், மைக்கல் பாஸ்பெந்தர், ஜெனிபர் லாரன்ஸ், ஆஸ்கர் ஐசக், நிக்கோலசு ஹோல்ட், ரோஸ் பைரன், டை ஷெரிடன், சோஃபி டர்னர், ஒலிவியா முன் மற்றும் லூகாஸ் டில்போன்ற பலர் நடித்துள்ளார்கள். எக்ஸ்-மென்: அபோகாலிப்ஸ் படம் லண்டனில் 9 மே 2016 அன்று திரையிடப்பட்டது, மேலும் ஐக்கிய அமெரிக்காவில் 27 மே 2016 அன்று 3டி மற்றும் 2டி யிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச சந்தைகளில் ஐமாக்ஸ் 3டி யிலும் வெளியிடப்பட்டது. இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது, விமர்சகர்கள் அதன் கருப்பொருள்கள், இயக்கம் மற்றும் நடிப்பு போன்றவற்றை பாராட்டி விமர்சித்தார்கள். இந்த திரைப்படத்தின் தொடர்சியாக என்ற படம் 7 ஜூன் 2019 அன்று வெளியானது. தொடர்ச்சியான தொடர் திரைப்படங்கள்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia