எக்ஸ்-மென் (திரைப்படம்)
எக்ஸ்-மென் (X-Men) என்பது 2000 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் மார்வெல் காமிக்ஸ் என்ற வரைகதை புத்தகத்தில் வெளியான எக்ஸ்-மென் என்ற ஒரு கற்பனை பாத்திரக் குழுவை மையமாக வைத்து மார்வல் மகிழ்கலைக் கொம்பனி, பேட் ஹாட் ஹாரி புரொடக்ஷன்ஸ் மற்றும் டோனர்ஸ் கொம்பனி போன்ற நிறுவனங்கள் மூலம் தயாரித்து 20ஆம் சென்சுரி பாக்ஸ் என்ற நிறுவனம் மூலம் விநியோகிக்கப்பட்டது. லாரன் ஷல்லர் டோனர் மற்றும் ரால்ப் விண்டேர் ஆகியோர் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு டேவிட் ஹேய்டர் என்பவர் திரைக்கதை எழுதியுள்ளார். இந்த திரைப்படத்தை பிறையன் சிங்கர் என்பவர் இயக்க, பேட்ரிக் ஸ்டீவர்ட், ஹியூ ஜேக்மன், இயன் மெக்கெல்லன், ஹாலே பெர்ரி, பாம்கே ஜான்சென், ஜேம்ஸ் மார்ஸ்டன், புரூஸ் டேவிசன், ரெபேக்கா ரோமெயின், ரே பார்க், அண்ணா பகுய்ன் போன்ற பலர் நடித்துள்ளார்கள். எக்ஸ்-மென் என்ற திரைப்படம் ஜூலை 12, 2000 இல் எல்லிஸ் தீவில் திரையிடப்பட்டது, இரண்டு நாட்களுக்குப் பிறகு ஐக்கிய அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. இது வசூல் ரீதியாக வெற்றி பெற்றது, உலகளவில் 296.3 மில்லியனுக்கும் அதிகமான வசூல் செய்தது, மேலும் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இப் படத்தின் செயல்திறன், கதை மற்றும் கருப்பொருள் போன்றவற்றிக்கு பாராட்டப்பட்டது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து எக்ஸ்-மென் 2 (2003), எக்ஸ்-மென்: த லாஸ்ட் ஸ்டேண்ட் (2006), எக்ஸ்-மென் முதல் வகுப்பு (2011), எக்ஸ்-மென்: இடேசு ஒஃப் பியூச்ச ஃபாசுற்று (2014), எக்ஸ்-மென்: அப்போகலிப்ஸ் (2016), எக்ஸ்-மென்: டார்க் பீனிக்ஸ் (2019) போன்ற பல தொடர் திரைப்படங்கள் வெளியானது. நடிகர்கள்
தொடர்ச்சியான தொடர் திரைப்படங்கள்எக்ஸ்-மென் 2 (2003)மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia