ஐ.எசு.ஓ 639-2ஐ.எசு.ஓ 639-2 (ISO 639-2) என்பது ஐ.எசு.ஓ 639 பன்னாட்டு சீர்தர மொழிக் குறியீட்டின் இரண்டாம் பகுதியாகும். இது உலகின் பெரும்பாலோர் பேசும் மொழிகளை அடையாளப் படுத்தும் வகையில், 464 மூன்றெழுத்து குறியீடுகளை (ஆல்பா-3 குறியீடுகள்) கொண்டுள்ளது. இவ் வெழுத்துக் குறியீடுகள் இலத்தீன் எழுத்துகளில் அமைந்துள்ளன. இவை மொழிகளைச் சுருக்கமாகக் குறிக்க பயன்படுகின்றது. ஐக்கிய அமெரிக்காவின் சட்டமன்ற நூலகம் (Library of Congress) இந்த ஐ.எசு.ஓ 639-2 குறியீடுகள் வழங்க பதிகை ஆணய(registration authority)மாக செயல்படுகிறது (referred to as ISO 639-2/RA). அந்த பொறுப்பில் பரியப்படும் மாற்றங்களை பெற்று அவைகளை ஆய்வுக்குள்ளாக்குகிறது. தவிர பதிகை ஆணையமாக ஐ.எசு.ஓ 639-RA கூட்டு பரிந்துரை குழுவில் அங்கம் வகித்து ஐ.எசு.ஓ 639 குறிகள் பராமரிப்பில் பொறுப்பேற்கிறது. ஐ.எசு.ஓ 639-1 ஈரெழுத்துக்களைக் கொண்டு அனைத்து மொழிகளையும் அடையாளம் காட்டவியலாது என 1989ஆம் ஆண்டில் ஐ.எசு.ஓ 639-2 சீர்தரத்திற்கான வேலை ஆரம்பித்தது. ஐ.எசு.ஓ 639-2 சீர்தரத்தின் முதல் பதிப்பு 1998ஆம் ஆண்டு வெளியானது. பி(B) மற்றும் டி(T) குறிகள்பெரும்பாலான மொழிகளுக்கு சீர்தரத்தில் ஒரு குறியே கொடுக்கப்பட்டிருந்தாலும் இருபது மொழிகளுக்கு மட்டும் இரண்டு மூன்றெழுத்து குறிகள் வழங்கியுள்ளனர். ஒன்று-"bibliographic" நூல்வழி குறி (ISO 639-2/B)-முன்னிருத்தலுடன் இணங்கியிருக்க மொழியின் ஆங்கில பெயரை ஒட்டியது. மற்றது - "terminological" சொல்லாட்சி குறி (ISO 639-2/T)- மொழியின் நாட்டுப்பெயர். இந்த 20 மொழிகளுக்கும் ஐ.எசு.ஓ 639-1இலும் குறிகள் உண்டு. பொதுவாக டி குறிகள் விரும்ப்படுகிறது; ஐ.எசு.ஓ 639-3 ஐ.எசு.ஓ 639-2/Tஐ பயன்படுத்துகிறது. ஆனால் ஐ.எசு.ஓ 15924 தனது குறிகளை ஐ.எசு.ஓ 639-2/B விலிந்து பெறுகிறது. செயல்வீச்சும் வகைகளும்
வகைகள் (தனிமொழிகளுக்கு மட்டும்):
சிறப்பு நிலைமைகள்சில சிறப்பு நிலைமைகளுக்காக குறிகள் ஒதுக்கப்பட்டுள்ளன:
மொழித்தொகுதிகள்சில ஐ.எசு.ஓ 639-2 குறிகள் தங்கள் மொழிகளையோ அல்லது சார்ந்த மொழிகளையோ மிகச்சரியாக குறிக்காதபோது (பெருமொழிகள் போலல்லாது), அவை மொழித்தொகுதி என அறியப்படுகிறது. அவை ஐ.எசு.ஓ 639-3வில் சேர்க்கப்படுவதில்லை. 639-3 வரைவெல்லை பரணிடப்பட்டது 2013-02-08 at the வந்தவழி இயந்திரம் தளத்தில் பெருமொழிகளுக்கும் மொழித்தொகுதிகளுக்குமான வேற்றுமை விவரிக்கப்பட்டுள்ளது. 639-2 வெளிப்படையாக மொழித்தொகுதியென அறியப்படாதவை
பிகாரி (bih) மொழிக்கு ஐ.எசு.ஓ.639-2வில் மொழித்தொகுதியாக குறியீடு கொடுக்கப்பட்டாலும் ஐ.எசு.ஓ 639-1இல் தனிமொழியாக (bh) கொடுக்கப்பட்டுள்ளது. வெளிப்படையாக பல மொழிகளை உள்ளடக்கும் எண்ணத்துடன்
மேலும் பார்க்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia