ஒடிசா மாவட்டங்களின் பட்டியல்
ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களின் பட்டியல் (List of districts of Odisha) இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள ஒரு மாநிலமான ஒடிசாவில் இடம்பெற்றுள்ள மாவட்டங்களை பட்டியலிடுகிறது. ஒடிசா மாநிலம் 30 நிர்வாக புவியியல் அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1][2][3] இந்த 30 மாவட்டங்கள் தங்கள் நிர்வாகத்தை சீராக்க மூன்று வெவ்வேறு வருவாய் கோட்டங்களின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. மத்திய, வடக்கு மற்றும் தெற்கு கோட்டம் என்பன அம்மூன்று கோட்டங்களாகும். மத்திய கோட்டத்திற்கு கட்டாக் நகரமும் , வடக்கு கோட்டத்திற்கு சம்பல்பூர் நகரமும், தெற்கு கோட்டத்திற்கு பெர்காம்பூர் நகரமும் தலைமையிடங்களாகச் செயல்படுகின்றன. ஒவ்வொரு கோட்டமும் 10 மாவட்டங்களைக் கொண்டுள்ளன. இந்திய ஆட்சிப் பணியின் மூத்த அதிகாரி ஒருவர் வருவாய் கோட்ட ஆணையராக கோட்டத்தை நிர்வகிக்கிறார். நிர்வாக வரிசையில் கோட்ட வருவாய் ஆணையரின் நிலை மாவட்ட நிர்வாகத்திற்கும் மாநில செயலகத்திற்கும் இடையில் உள்ளது. ஒவ்வொரு மாவட்டமும் ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. ஆட்சியர் இந்திய ஆட்சிப் பணிலிருந்து நியமிக்கப்படுகிறார். ஆட்சியர் & மாவட்ட குற்றவியல் நீதிபதி நிலையில் இருப்பவருக்கு வருவாய் சேகரித்தல் மற்றும் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டமும் துணை-கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் ஒரு துணை-ஆட்சியர் மற்றும் துணை-குற்றப்பிரிவு நீதிபதியால் நிர்வகிக்கப்படுகிறது . துணை கோட்டங்கள் மேலும் தாலுக்காக்களாகப் பிரிக்கப்படுகின்றன. தாலுக்காக்களை தாசில்தார்கள் தலைமையில் செயற்படுகின்றன. ஒடிசா மாநிலத்தில் 3 கோட்டங்கள், 30 மாவட்டங்கள், 58 துணை-கோட்டங்கள் , 317 தாலுக்காக்கள் மற்றும் 314 வட்டாரங்கள் உள்ளன. கோட்டங்கள் அடிப்படையில் மாவட்டங்களின் பட்டியல்![]() வடக்கு மத்திய தெற்கு ஒடிசாவின் 30 மாவட்டங்கள் தங்கள் நிர்வாகத்தை சீராக்க மூன்று வெவ்வேறு வருவாய் கோட்டங்களின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. இக்கோட்டங்கள் ஒவ்வொன்றும் 10 மாவட்டங்களைக் கொண்டுள்ளன. நிர்வாகத் தலைவராக வருவாய் கோட்ட ஆணையர் உள்ளார். கோட்டங்களின் கீழ் வைக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் பட்டியல்:
நிர்வாகம்ஆட்சியர் & மாவட்ட குற்றவியல் நீதிபதி ஒரு மாவட்டத்தின் வருவாய் சேகரிப்பு மற்றும் நிர்வாகத்திற்கு பொறுப்பு வகிக்கிறார். இந்தியக் காவல் பணியைச் சேர்ந்த காவல்துறைக் கண்காணிப்பாளர் மாவட்டத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்புடைய பிரச்சினைகளை பராமரிக்கும் பொறுப்பு வகிக்கிறார். மாவட்டங்கள்ஒடிசாவில் 30 மாவட்டங்கள் உள்ளன. மயூர்பஞ்ச் மிகப்பெரிய மாவட்டம் ஆகும். ஜகத்சிம்மபூர் பரப்பளவில் மிகச்சிறிய மாவட்டம் ஆகும். மக்கள் தொகை அடிப்படையில் கஞ்சம் மிகப்பெரிய மாவட்டம் ஆகவும் தேவ்கட் சிறிய மாவட்டமாகவும் விளாங்குகின்றன. ஒடிசா மாநிலத்தின் தலைநகரமான புவனேசுவர் கோர்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது. 30 மாவட்டங்களின் பகுதிகளும் மக்கள் தொகையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:[4][5]
மேலும் பார்க்கவும்மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia