கலகப் பெண்ணியம்
கலகப் பெண்ணியம் (anarcha-feminism) அல்லது ஒழுங்கறவுப் பெண்ணியம் (anarchist feminism) என்பது ஒழுங்கறவுக் கோட்பாட்டையும் பெண்ணியத்தையும் இணைத்து அவை இரண்டன் நெறிமுறைகளையும் அதிகாரத்தையும் பற்றிப் பகுத்தறியும் முறைமையாகும். இது பிரிவிடை உறவுப் பெண்ணியத்தை ஒத்தமைவதாகும்; இம்முறைமை, பொதுவாக தந்தைவழி முறைமை, மரபான பாலினப் பாத்திரங்கள் ஊடாக வெளிப்படும் ஒடுக்குமுறைப் படிநிலை மையங்கலைந்த விடுதலையான கூட்டுறவால் பதிலிடப்படவேண்டும் என வற்புறுத்துகிறது. கலகப் பெண்னியர்கள் தந்தைவழி முறைமை எதிர்த்த போராட்டம் வருக்க எதிர்ப்புப் போராட்டத்தின் சாரநிலைப் பகுதியாகவும் அரசையும் முதலாளியத்தையும் எதிர்க்கும் ஒழுங்கறவுப் போராட்டத்தின் உட்பகுதியாகவும் பார்க்கிறது. சாரநிலையில், ஒழுங்கறவுப் போராட்டம் பெண்ணியப் போராட்டத்தின் கட்டாயப் பகுதியாகவும் பெண்ணியப் போராட்டம் அதேபோல, ஒழுங்கறவுப் போராட்டத்தின் பகுதியாகவும் அமைகிறது எனக் கலகப் பெண்ணியக் கோட்பாடு கருதுகிறது. எல். சுசான் பிரவுன் " ஒழுங்கறவு முறைமை அனைத்துவகை அதிகார உறவுகளையும் எதிர்க்கும் அரசியல் கோட்பாடாகும்; எனவே, இயல்பாகவே இது பெண்ணியத்திலும் அமைகிறது" என்றார்.[1] மீக்கயீல் பக்கூனின் நிகரறப் பன்னாட்டுக் கூட்டுறவு மக்களாட்சி நோக்கங்களில் ஒன்றாகப் பாலினச் சமனின்மையை நீக்குவதைச் சேர்த்ததும், ஒழுங்கறவு இயக்கத்தில் மகளிர் உரிமைகள் முதன்மையான அக்கறையாக மாறியது.[2] இந்த ஒழுங்கறவு பொதுவுடைமைக் கூட்டணிபிஎர்டெரிக் ஏங்கல்சின் குடும்பம், தனிச்சொத்து, அரசின் தோற்றம் எனும் நூலின் குடும்பம் குறித்த ஆய்வை ஏற்றது. இந்நூல் பொருளியல் சமனின்மையோடு இணையாகப் பாலினச் சமனின்மையையும் நிறுவியது.[3] கருநிலைக் குடும்பத்தில் திருமணவழி நிலைநிறுத்தப்பட்ட இந்தச் சமூக, அரசியல் அதிகாரவெதிர்ப்பு சார்ந்த உய்யநிலைத் திறனாய்வு பல பெண்னியவாதிகளைக் கலகப் பெண்னிய இயக்கத்தை நோக்கியும் ஒழுங்கறவுச் சிந்தனைபாலும் ஈர்க்கலானது.[4] பின்னரான பெண்னியம், ஒழுங்கறவியம் இரண்டையும் இணைத்து செய்த தொகுப்பாய்வு, அப்போது இப்பெயரில் தெளிவாக அடையாளப் படுத்தப்படாவிட்டாலும், பிறகு கலகப் பெண்ணியம் என அழைக்கப்படலானது.[5] வரலாறுபின்னணிஒழுங்கறவியம் பாலினச் சமனின்மை முறையாக கட்டாயப்படுத்தப்பட்டு, மகளிர் பொது வாழ்க்கையில் இருந்து விலக்கி வைக்கப்பட்டபோது அரசியல் நெறியாக எழுச்சி கண்டது. அப்போது மகளிர் இருத்தலே, கருநிலைக் குடும்பத்தில் மரபான தாய், மனைவி எனும் பாலினப் பாத்திரங்களை வகித்தலோடு மிகவும் வீட்டளவில் சுருங்கியிருந்தது. குறிப்பாக,கௌழைக்கும் மகளிர் அரசியலாகவும் பொருளியலாகவும் இரட்டை ஒடுக்குதலுக்கு ஆட்பட்டனர்; இந்நிலை மகளிரை அரசியல் போர்க்குணத்தை வரித்து, நிகரறவியத்துக்கு நெருக்கமாக வைத்தது. அவர்கள் தம் பாலின, இனப்பெருக்க உரிமைகளுக்காகவும் விடுதலைக் காதலுக்காகவும் பொராடத் தொடங்கினர். இந்நிலைமை தான் கலகப் பெண்ணியம் எழுச்சிபெற்றுத் தோன்றிட வழிவகுத்தது.[6] ஒழுங்கறவியத்தின் தொடக்கநிலை முன்னோடிகள் பெண்ணிய அணுகுமுறையைத் தொடவே தயங்கினர்: பியேர் ஜோசப் புரூதோன் பெண்ணியர்களின் வேண்டலான பாலினச் சமனிலையைக் கடுமையாக எதிர்த்து, மரபான குடும்ப விழுமியங்களைப் போற்றினார்;[7]பீட்டர் குரொபோத்கின் பெண்ணிய இலக்குகளை வருக்கப் போராட்டத்துக்கு அடுத்தநிலையில் வைக்கவேண்டுமென எண்ணினார்;[8] பெஞ்சமின் தக்கர்சம உழைப்புக்குச் சம சம்பளக் கோரிக்கையை எதிர்த்தார்.[9] முதல் அலை (1880 கள் முதல் 1940 கள் வரை)![]() இரண்டாம் அலைமூன்றாம் அலைநான்காம் அலைகோட்பாடுகலகப் பெண்ணியம் பல்வேறு சிந்தனை நெடுக்கம் உள்ளதாகும். எனினும் இதன் பொதுவான உள்ளடக்கம் மகளிர் தன்னியக்க நெறிமுறைகள் ஆகும். இவற்ரீல் விடுதலைக் காதல், பிரிவிடை உறவு போன்றன அடங்கும்.[10] கலகப் பெண்ணியம் முதலாளியம், அரசு, மகளிருக்கு எதிரான நிறுவனமயப் பாகுபாடு ஆகியவற்றை எதிர்த்து, சமூக, அரசியல் வாழ்வில் மகளிரை அதிகாரப்படுத்தலுக்குப் போராடுகிறது.[11] அதிகாரவெதிர்ப்புவிடுதலைக் காதல்பிரிவிடை உறவுஇனப்பெருக்க உரிமைகள்பாலியல் பணிமேலும் காண்க
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்பு |
Portal di Ensiklopedia Dunia